ஒரு வார்த்தை,,
இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,,
மூன்றெழுத்து உடையது,,
நான்கு திசைகளிலும் கலந்தது,,
ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,,
ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்டது,
வேறென்னவாக இருக்கும்,
தனிமை தான் ,
மதியை இழக்கும் அக்கணத்தில்,
மனத்தில் பிறக்கும் ஒருவித ரணம்!!
ரணமென்றால் என்னவாக இருக்கும்,!!?!!
தாயை இழந்த சேய், தன் இழப்பை நினைக்கும் அந்தக் கணம்!
காதலனைப் பிரிந்த காதலி கதறுவாள் தினம்!!
இதானோ ரணம், ஆம்; காயப் பட்டோர் அனுபவிக்கிறார்கள் அனுதினம்!!!
தனிமை என்றால் பயமா என்ன?
தனிமை என்னும் தலைப்பில் கவிதை எழுத நான் வார்த்தைகளை அழைத்த போது, அவை வரமாட்டேன் என்றன, அவைகள் கூடத் தனிமையை எண்ணி அஞ்சினர் போல !
_இப்படிக்கு
உம் அனைவரைப் போலவே மனதில் ரணமுள்ள
சராசரி பெண் ஆகிய நான்!