கன்னிக் கவியொருத்தி
அந்தாதியென்றெண்ணி
எழுதும் கவி
கவி பெண்ணுருக்
கொண்டெழுந்ததோவென்றையம்
கொள்ளும் வண்ணம்
முருகுடைய மடந்தை
கரம் பற்றினான் மறவன்
மறவன் முன் தினம் மணந்த
மடந்தையை பிரிந்து மறம்புரிய
மன்னன் முரசறைந்தரிவித்ததன்
பேரில் சமர் சென்றான்
சென்றான் சமரன் திரும்பி
அரசோலை மட்டும் வந்தது
மாரில் வேல் தாங்கி
தன் உயிர் நீத்து நாடுகாத்தானென்று
நாடுகாத்தானென்று பெயர் பெற்றவன்
மணையாள் விதவையானாள்
கைம்பெண் கையில் வாளேந்தினாள்
தன் வாழ்க்கை துணைவரின் வேலைப்பெற்றாள்
வேலைப்பெற்றாள் கோதை வீரம்
செறிய சமரம் புரிந்தாள்
செங்கோலான் செப்பினான், சமரில்
கைதேர்ந்தவள் கன்னி