செங்கதிரோன் ஆதிக்கம் அதிகரிக்கும் கோடையிலே..
மக்களின் மனம்குளிர கருமுகிலின் தூதனாய் - வையகம்
வளமாக வந்திறங்கிய எம் அரிச்சுனமே.-உன்னைத்
துளி துளியாகக் காண என் கண்கள் என்ன தவம் செய்தனவோ!
நான் மட்டுமல்ல, ஓட்டை உடைத்து தடையைத் தகர்த்து
மண்ணின் மேல் எழ வேண்டும் என எண்ணிய
ஒவ்வொரு விதையும் உன் வருகையை எதிர்பார்க்கின்றன.
பட்டுப்போன மரமெல்லாம் பசுஞ்சோலையாக மாற
வந்திறங்கிய எம் அரிச்சுனமே! நீ வருக…!