சினம் பொறுத்துச் சாய முயன்றேன்
சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது
சிகரமெனும் சிந்தனையில்
சிறு குட்டை கூட சிந்தாமல்
சுவர் மேல் சுவர் எழுப்பி
செல்வங்கள் செதுக்கி சிரித்தது
சோகம் அறியா சுகத்திற்காக
சேவை செய்த சதுப்பைச் சிதைத்து
செந்தாமரைக் குலங்கள் சாலைகளாயின
சோலைகள் கணினிச் சந்தைகள் ஆயின
சந்திரன் கூட செயற்கை ஆனது
சக்கரங்கள் சுற்றி சிட்டாய் பறந்தது
சட்டம் சரிந்து சூதானது
சோம்பல் சிறந்த சவமானது
சற்றும் சிணுங்காமல் சீறிப்பாய்ந்தேன்
சுயமாய் ஏரிகளின் சுதந்திரம் கேட்டேன்
என் பெயர் மைச்சாங்க் புயல்!