இறந்து போன மாதங்கள் …..
கடந்து போன நாட்கள் …..
தவறி போன மணித்துளிகள்….
சிதறிப் போன விநாடிகள் ….
இன்னும் இலக்குகள்
முடிந்தபாடில்லை….
இளைப்பாறிட இன்னல்கள்
இடம் தரப் போவதில்லை
எட்டிடும் வரை நம் பயணம்
கடிதான ஒன்றே !...
கடக்கவிருக்கும் காலங்களில்
பல அழுகை சில புன்னகை
கட்டி அணைத்திடும் உறவுகள்
நமக்கான சில நேரங்கள்
சிலருக்காக சிறு வேடங்கள்
நிபந்தனையாக சில வேதனைகள் (என பல)
மாற்றங்கள் விரும்பாத
மனநிலை உண்டோ?
வலிகள் இல்லாத
வாழ்க்கை உண்டோ ?
பொருள் புலப்படாத
வார்த்தைகளின் தொகுப்பில்
தோன்றிய பிழை நான்
மறைந்து விடுவேனா ?
மாற்றப்படுவேனா ?
நம்பிக்கையுடன்
எதிர் நோக்கி பயணம் செல்வோம்
எதிர்காலத்திற்கு ......