கடந்த நான்கு ஆண்டு
கருப்பு வெள்ளையாக கண்ணெதிரே தோன்ற,
சிறிது கண்ணீர் விடும்
கல்லூரி பறவைகளே!
துவைக்காத துணிகளையும்
துருபிடிக்காத நினைவுகளையும்
சுமந்து கொண்டு,
சொந்த ஊருக்கு சோகத்துடன்
செல்லும் 'செல்ல அண்ணாக்களே/அக்காக்களே'
மீண்டும் கல்லூரி வாழ்க்கை
கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன்,
நீளமான சிவப்பு சுவர்களையும்
சாயம்போன சிவப்பு கயிற்றையும்
கண்ணிமைக்காமல் காணும் பட்டதாரிகளே!
கடைசியாக ஒரு செல்பிக்கு சிரிக்கும் சீனியர்களே!
வருத்தம் தான் உங்களைப் பிரிவது.
ஆனாலும் பிரிவை தடுக்க முடியவில்லை.
"தேர்வெழுத வாருங்கள்
டீரிட்டு வைத்து செல்லுங்கள்"
"உங்கள் பாதங்கள் வழியே
எங்கள் பாதைகளும்
பயணங்களும்"