Loading...

Articles.

Enjoy your read!

வலியும்_வாழ்க்கையும்

வலியின்றி வாழ்க்கை எதையும் கற்றுத்தருவதில்லை!
ஒருவரின் வலியில் இன்னொருவர் வாழ்கின்றார்.
ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம் காண்கின்றார்.
ஒருவரின் அழுகை இன்னொருவரின் சிரிப்பாக இருக்கிறது.
 மெழுகின் வலியில் ஒளி வாழ்கின்றது!
 கல்லின் வலியில் சிற்பம் வாழ்கின்றது!
யாரோ ஒருவரின் வலியில் தான் நாம் வாழ்கின்றோம்.
“ இதுதானோ வாழ்க்கை? இதை வாழத்தான் வேண்டுமா?” என்பது வினா என்றால்,
“ஆம்! வாழத்தான் வேண்டும்” என்பது பதில் ஆகும்.
 “ஏன்?” என்ற வினா மீண்டும் மனதில் எழுமே ஆனால்,
அதற்கான பதில், “ஏதோ ஒரு உயிர் நீ வாழும் இந்த வாழ்க்கைக்காக வலியில் துடித்துக்கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்” என்பதே.
அந்த வலிக்கு அர்த்தம் சேர்க்க நீ வாழவேண்டும் இந்த வாழ்வை!
ரணம் இல்லாத மனம் இல்லை;
வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை!

Tagged in : life, Lessons, Pain, poem,

   

Similar Articles.