Loading...

Articles.

Enjoy your read!

தேய்பிறை முதல் வளர்பிறை வரை

நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை

வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை

ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை

திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை

 

கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான்

மண்ணில் கரைந்து மரத்திற்கு உரமாகும்

கடலில் இருக்கும் பொழுது உவர்க்கும் தண்ணீர்தான்

மழையாய் வந்து உயிர் கொடுக்கும்

பாலைவனத்தில் மணல் சுமக்கும் காற்று தான்

பூஞ்சோலையில் பூமணம் கொண்டு வீசும்

 

பட்டுப்போன மரங்கள் பருவமழையில் துளிர்விடும்

விட்டுப்போன சொந்தங்கள் ஒருநாள் திரும்பிவரும்

நம்பிக்கையோடு எதிர்கொண்டால் வெற்றிகள் தேடிவரும்

முடிந்து போனதை கடந்து வந்தால் வாழ்க்கை அழகுபெறும்

 

எல்லாமே மாறும், எப்போதும் மாறும், இங்கு

மாற்றம் ஒன்று மட்டுமே நிரந்தரம்

Tagged in : poem, MAATRAM, SIRANDHADHU,

   

Similar Articles.