நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம்,
247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!!
என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.
அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக,
இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை,
யாம் எடுத்துக் கூறுவதற்கு இயலுமா ?
அந்த ஆற்றல் எமக்கு இருக்கிறதா ? என்று, யாமும் வாய் அடைத்துப் போனேன், ஏனெனில் அதற்கான பதில் என்னிடமும் இல்லை என்பதால்!!
நட்பு என்னும் உறவு ஓர் உன்னதமான உணர்வு, அதை வர்ணிக்க வார்த்தைகள் போதுமா என்ன?
ஏன் உங்கள் கண்ணில் காணப் படும்
இவ்வார்தைகள் கூட மனம் நடுங்கிக்கொண்டுதான் இக்கவிதையை உங்களுக்குத் தெரிவிக்கின்றன!
இரவில் நிலவில்லாமல் ஒளி இல்லை,
பறந்து விரிந்த புவிக்கும் நட்பில்லாமல் இயங்க வழி இல்லை !!