Loading...

Articles.

Enjoy your read!

நாத்திகன் நானல்ல

சிவ ராத்திரி அன்னைக்கி,

கறி கடிச்ச நேரம் மூனு மணிக்கி,

ஊர் முழுவதும் ஒரே பொட்டலில்!

 

பொட்டலுக்கு,

வந்த பின்னே வந்து இறங்கியது,

சின்னக்கருப்பு!

 

சாம்பல் இட்ட சாமத்துல

குமுறிக்கிட்டு வந்துச்சு

பெரியகருப்பு!

 

பூசிய சாம்பலுக்கும் வராதது,

பூசாரி வருந்தியதுல,

வந்து இறங்கி ஆடுச்சு,

முத்து கருப்பு!

 

கருப்பு கச்சை கட்டிக்கிட்டு,

சிங்குசிங்குனு ஆடிவரும் சின்னக்கருப்பு

வீச்சருவால ஏறி நின்னு

சொன்னவாக்கு பொய்யாகாது!

 

அந்தந்த சாமி அடையாளத்தோட

அம்சமா களரில வந்து ஆடும்!

 

கருங்காலி கம்பெடுத்து

பொட்டலிலே போட்ட ஆட்டம்,

செவ்வந்தியா சிதறி கிடக்கும்,

வழிநெடுக…….

 

மூனு கருப்போட,

நொண்டி கருப்பு சேர்ந்தாட

அடிச்ச அடியில

சாட்டையும் திரிஞ்சு சக்கையாகும்!

 

நான் போட்ட

மாலை மணக்கலைனு சொல்லாம,

உன் வாசலுக்கு வந்தால்

தீட்டுன்னு தான் ஒதுக்காம,

படிவாசல் ஏறினா

பாவம் ஆகுமுன்னு நினைக்காம,

காசு இருந்தா சிறப்பு தரிசனம்

என்கிற பாகுபாடு இல்லாம,

எந்நேரத்துல வந்தாலும

 நடை சாத்தாம ,

கூப்பிட குரலுக்கு,

கோபம் கொள்ளாம

காவலுக்கு வந்து நிக்கும் -என்

முப்புலி கருப்பு  இருக்கும் வரை

 

என் நாக்கு நாத்திகம் பேசாது!

Tagged in : VILLAGE, THEIST, poem,

   

Similar Articles.