Loading...

Articles.

Enjoy your read!

மறுபிறவிக்குக்  காத்துக் கொண்டே!!!

தனிமையில் தத்தளித்த எனக்குத் துணைநின்று தழுவிய க்ரீன் பெஞ்சின் மடி எங்கே?
ருசியற்ற உணவை ரூமர் கேட்டுச் சாப்பிட்ட  மெஸ் அறையின் வாசம் எங்கே?
பேக் பெஞ்சுகளில் உல்லாசமாக உறங்க வைத்த வாத்தியாரின் தாலாட்டு ராகம் எங்கே?
குருநாத் கடையில் கூட்டமாகக் குதுகலிக்கும்  கேங்குகள் எங்கே?
CS,IT மாணவர்கள் கூட்டம் கூடும்  KP வாசலும்  கதையடிக்கும்  கேபிடேரியா எங்கே?
ப்ளூ ஷெடில் அமர்ந்து சுடச்சுட நூடுல்ஸையும் ஐஸ் டீயையும் ருசித்த நாட்கள் எங்கே ?
தேவையான தகவல்களை Alumni படிகளில் தேவைக்கதிகமாகப் பரிமாறும் NSS பந்தங்கள் எங்கே?
SNH -ல் படிப்போரைத் தன் அன்புமழையால் பதறியடித்துப் பறக்கவைத்த ரோட்டராக்ட் குடும்பம் எங்கே?
பார்லமென்டே பல்லாண்டுகாலம் பூட்டபட்டாலும் மாதம் முழுதும் மீட் வைத்துக்  கதிகலங்கவைக்கும் க்ளப் குருக்கள் எங்கே?
ரிஸல்ட் என்ற வரம் வந்தபின் arrear தோஷங்கள் தீரச் செல்லும் ACOEயின் கோவில் எங்கே?
ACயுடன் OCயில் Wifi தந்து தென்பாண்டி சீமையில் தேரோடாத வீதியில் நின்ற RCCயின் வரவேற்பறை எங்கே?
தேர்வெழுதும் முன்னே மட்டும் தேவாலயமாகத் தெரியும் எங்கள் நூலகம் எங்கே?
ஹௌஸ்ஃபுள் என்று வயிறு கதறியும்‌ பொருட்படுத்தாமல் எங்கள் நரிக்கூட்டத்துடன் குடித்த கூல் பிஸ் டீ எங்கே?
காசே இல்லாவிடினும் கடன் வாங்கித் தின்ற காஃபி ஹட்டின் Lays பாக்கெட்கள் எங்கே?
"டீ சார் டீ" என்று டேஸ்டி டீயினை இரவினில் குடிக்கத் தந்த எங்கள் அண்ணன் எங்கே?
மினி கூள் பிஸ்-ஸைப் போன்று திறந்திருந்த எங்கள் க்ளோரோஃபில்லின் வசந்த மாளிகை எங்கே?
பசங்களையே பொறாமைப்பட வைத்த ஹாஸ்டல் பெண்களின் மின்சாரக் கண்ணன் என்றறியப்படும் எங்கள் நாய்க்குட்டி "சீம்ஸ்" எங்கே?
CEG மக்களின் மனமறிந்து  விருந்தோம்பிய "கேசியா" கேன்டீன் எங்கே?
ஆவின் முகப்பிலும் காஃபி ஹட் வாசலிலும் இரைத் தேடி காத்திருக்கும் குரங்குகளின் வழிப்பறிகள் எங்கே?
வெட்டியாக இருந்தும் வெறித்தனமாகப் பங்க் செய்த மாஸ் பங்க் தினங்கள் எங்கே?

இவை அனைத்தையும் தொடுதிரையில் தேடி அலைந்தேன் தேல்பத்திரி சிங் போல் ! களைப்பும் வருத்தமும் மட்டும் மிஞ்சவே audio video  ஆஃப் செய்து ம்யூட் செய்து  சென்றேன் உறங்க!
தூக்கத்திலும் தூங்க விடாமல் துரத்தியதே அந்நினைவுகள்!
நினைவுகளின் நதியில் நீங்காத உணர்வுகளுடன் தொடர்கின்றேன் என் பயணத்தை!
அந்நாட்களின் மறுபிறவிக்குக்  காத்துக் கொண்டே!!!

Tagged in : MySpace, Memories, Missings, CEG,

   

Similar Articles.