நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை,
சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை;
சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம்.
கண்ணீர்த் துளிகள்-
உயிர் இல்லா மனிதனுக்கு
உயிர் உள்ளவர்கள்
உதிர்க்கும் குளியல் நீர்;
மிகக் கொடூர குணம் கொண்ட மனிதனையும்
சிலருடைய நாவினால் நல்லவன் எனப் பேசும்
மகிமை கொண்டது மரணம்;
மறுக்க முடியாது
இருப்பினும் ஏற்றாக வேண்டியது.
மரணத்தின் பின் நீ வாழ வேண்டுமா?
இரக்கம் கொள்;
இரவுகள் உறங்குவதற்கு மட்டுமல்ல
எனச் சிந்தித்துச் செயல் படு.
அடுத்தத் தலைமுறைக்கும்
உன் செயல்கள் நிலைக்கும் படி
உன் வாழ்வை மாற்று.
எதிரியும் உன்னை விரும்புவான்;
வசந்தங்கள் கூட
காலங்கள் மாற மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் இனி உன்
மரணத்தைக் காலங்கள் கூட
சாகடிக்க (மாற்ற) முடியாது.