மனிதனின் மனதைக் கலங்கச் செய்யும் வார்த்தைகளுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் வார்த்தை அது..
ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில்..
உயிரற்ற கல்லின் மாற்றமானது, காண்போரின் கண்ணுக்கு உயிரூட்டும் சிலையாக இருக்கிறது.
ஓரறிவு கொண்ட வண்ணத்துப்பூச்சி, புழுவின் நிலையிலிருந்து உருமாற்றம் பெற்று , கண்ணைக் கவரும் உயிரினமாகப் பறந்துத் திரிகிறது...பின் ஆறறிவு கொண்டுள்ள மானுடப்பிறவி ஆகிய நாம் நம் வாழ்வில் வரும் மாற்றங்களை எண்ணி கலங்குவது எதற்காக?
மாற்றம் என்ற ஒன்று நம் வாழ்வில் இருந்துகொண்டே தான் இருக்கும்.
சில நேரங்களில் இன்பம் தரும்...சில நேரங்களில் இன்னல்களை விளைவிக்கும்.
இரவும் பகலும் இருந்தால் தானே அதை நாள் என்கிறோம்...
நாணயத்தில் இரு பக்கங்கள் இருந்தால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு, அதுபோல வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் மாறி வருவது இயல்பு!!
மாற்றத்தைக் கண்டு கலங்காதே
கடந்து விடு!!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள், அதுபோலத் தான் மாற்றம் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்!!