போர் வீரனுக்கு காதலி எழுதுவது
போரில் இருக்கும் வீரனிடம்
கருணையை எதிர்பார்ப்பது
எவ்வித நியாயம் என்று நீ எண்ணலாம்.
ஆசை வார்த்தைகள் பொழிய வேண்டாம்,
அழகு பொருட்கள் கொண்டு வர வேண்டாம்,
அன்பு வெள்ளம் தேவையில்லை,
காதல் மழையும் தேவையில்லை.
கருணை துளியாய்
என்மீது விழு — அல்ல,
கானல் நீராய் கூட
காட்சி தா!
இதற்கும் நீ மறுமொழி கூறாமல் போனால்
நானும் போகிறேன்,
உன்னை காதலித்து
கெட்டுப் போகிறேன்!
அப்போதாவது
என்னை மீட்க வருவாயா?