கண்கள் பேசும் ரௌத்திரம்
அடிப்படையாக கொண்ட கேரளத்தின் பாரம்பரிய நடனம், கதகளி.
கதகளி, "கதை சொல்லும் நடனத்தின் உச்ச வடிவமாக விளங்குகிறது”. இது பெரும்பாலும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம், பகவதம் போன்ற கதைகளில் இருக்கும் நற்குணங்களை, நாடகம், நடனம் வார்த்தைகள் பேசா இடத்தில் கண்கள் பேசும் மௌனமாய்!!
மனித உடலின் ஐம்பொறிகளில் மிக முக்கியமான ஒன்று கண்கள். நம் கைகளால் தொட இயலாத பலவற்றை கண்கள் நொடியில் தொட்டுவிடும். அதுபோல், வார்த்தைகளால் சொல்ல இயலாத பல உணர்வுகளை கண்கள் வெளிப்படுத்தும். கண்கள் வெளிப்படுத்தும் நவரசத்தை மற்றும் கண்கள் மூலமாக கூறுகின்றது.
கதகளியில் கண்ணசைவுகளும், கையசைவுகளும் (முத்ரா) பயன்படுத்துவர். குறிப்பாக கதகளியில் மௌனமாய் பேசும் கண்கள் காட்டும் அபிநயங்கள், இந்நடனத்தின் மைய அழகாகும்.
கதகளியில், கண்களே மொழி, கண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளே வார்த்தைகள் - கலாமண்டலம் கோபி.
கதகளி, முக்கிய உணர்வுகளான வீரத்தையும், கோபத்தையும், அநீதி எதிர்ப்பையும் முகபாவங்கள், கண் அசைவுகள் மற்றும் கையசைவுகள் மூலம் உயிர்பித்து நமக்கு காட்டுகிறது.
கதகளி வெளிப்படுத்தும் ஒன்பது உணர்ச்சிகளில் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தது ரெளத்திரம், அதாவது “ரெளத்ர ராசா”. கதகளியில் வெளிப்படும் ரெளத்திரம் வெறும் கோபமல்ல - அது நீதிக்காக எரியும் தெய்வீக சீற்றம். கதகளியில் இந்த உணர்வின் வெளிப்பாடு தீவிரமாகவும் தாக்கமிக்கதாகவும் இருக்கும்.
கதகளி மேடையில் ரௌத்திரம் வெளிப்படும் போது, முகத்தின் ஒவ்வொரு தசையும், கண்களும் தீவிரத்துடன் இணைந்து கோபத்தின் சக்தியை வெளிப்படுத்துகிறது. கலைஞர் தனது உடலை முழுமையாகக் கட்டுப்படுத்தி, அதனை ஒரு கருவியாக மாற்றி, ரௌத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். கண்ணின் சிறிய அசைவுகள், பெரிதாக விரியும் பார்வை, நெருங்கிய நொடிகளில் தீவிரமாக மாறும் நகர்வுகள் இவை அனைத்தும் கோபத்தின் வெடிப்பை பார்வையாளரின் உள்ளத்திற்குள் அனுப்புகின்றன.
"கதகளி கலைஞரின் கண்கள் ஆயிரம் வார்த்தை பேசுகின்றன."- பாலலட்சுமி நாயர் (கதகளி கலைஞர்)
கதகளியில் நெற்றியின் மடிப்பு, புன்னகையின் மறைவு. கண்ணின் துடிப்பு" ஆகியவை ரௌத்திரத்தின் வெளிப்பாட்டில் அடிக்கடி காணப்படும். சில சமயம் கலைஞர் நாவை வெளியே நீட்டுவார், முகத்தில் சிவப்பு நிறம் பிரதிபலிக்கும், இவை அனைத்தும் கோபத்தின் தீவிரத்தை உணர்த்தும் வெளிப்பாடுகளாகும்.
கதகளியின் ரௌத்திரம் காட்சிப்படுத்தும் போது. கலைஞர் பெரும்பாலும் சிவப்பும் கருமையும் கலந்த ஒப்பணைப் பயன்படுத்துவார். ஏனெனில் கருப்பு அநீதிக்கு எதிரான வெறுப்பையும், சிவப்பு அதன் கோபத்தின் உசத்தையும் குறிக்கும். ஒரு கலைஞர் இதற்காக தனது உடலை, சுவாசத்தை, மனதைக் கட்டுப்படுத்தி, கோபத்தின் தீவிரத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்.
''ரௌத்திரம் வெளிப்படும் தருணத்தில் நான் என் உடலை மறந்து விடுகிறேன். கோபம் என்னுள் வாழ்கிறது. நான் அதன் கருவி மட்டுமே." என்றார் கதகளி கலைஞர்.
கதகளியில் "ரௌத்திரம்" என்பது வெறும் கோபத்தை மட்டும் அல்ல, அநீதி எதிர்த்து எழும் வீர உணர்வின் சின்னம் ஆகும்.. கண்கள் பேசும் அந்த ரௌத்திரம், பார்வையாளரின் மனதை துளைத்துச் செல்லும்; இதுவே கதகளியின் மெய், இதுவே அதன் தனித்தன்மை...