Loading...

Articles.

Enjoy your read!

'ழ'கரம்-தமிழுக்கு சிகரம்

அகரத்தை அகற்றி விட்டால்

    அம்மாவெனும் சொல்லுண்டோ? 

'ழ'கரத்தை விலக்கி விட்டால்

    அருந்தமிழில் சுவையுண்டோ? 

தகரத்தைத் தங்கமென

     மாற்றுகின்ற முலாம்போல

சிகரத்தில் தமிழ்நிற்க

     'ழ'கரமதில் நிலா போல!  

எம்மொழிக்கும் கிடைக்காத

      சிறப்பெழுத்து ஓரெழுத்து

செம்மொழிக்குக் கிடைத்ததிந்த

      'ழ'கரமெனும் சீரெழுத்து! 

அங்கத்தின் சிறப்புறுப்பு

      தலையாக இருப்பதைப்போல்

சங்கத் தமிழ் சிகரத்தில்

      'ழ'கரமதே தலையாக!!! 

Tagged in : ZHAGARAM, SIGARAM, poem,

   

Similar Articles.