Loading...

Articles.

Enjoy your read!

கரோனா சொல்லும் கவிதை

சிலரைச் சிரிக்க வைத்தேன்

பலரையோ அழ வைத்தேன்

சிலரைச் சிந்திக்க வைத்தேன்.

பலரையோ ஆராய வைத்தேன்


மருத்துவ உலகின் முன் நான் நிற்கின்றேன்.

அழிக்கப்பட வேண்டிய கிருமியாய்…

மத நம்பிக்கையாளர்கள் முன் நான் நிற்கின்றேன்

துரத்தப்பட வேண்டிய சாத்தானாய்...

காவல்துறைக்கு முன் நான் நிற்கின்றேன்

அடிப்பட வேண்டிய கைதியாய்…

நீதிக்கு முன் நான் நிற்கின்றேன்

தூக்கு தண்டனை பெறவேண்டிய கொலையாளியாய்…


சற்றே நன்கு கவனியுங்கள்

நன்றே நான் ஆற்றிய சிறு நன்மைகளை


முற்காலத்திற்கு அழைத்து சென்றேன்.

வீட்டில் நுழையும்முன் கை, கால்கள் கழுவ வைத்தேன்.

மதுவெறியர்கள் மதுவுக்கு விடைகொடுக்க அவகாசம் அளித்தேன்.

காற்று மாசை குறைத்துக் கொண்டிருக்கிறேன்

ஓசோன் மண்டல ஓட்டையை ஒட்டிக்கொண்டிருக்கின்றேன்

பிரிந்த கணவனை மனைவியை இணைத்தேன்

பெற்றோர் பிள்ளைகளைச் சேர்த்து வைத்தேன்

தமிழர் பண்பாட்டை வணங்குதலை நிலைநிறுத்தினேன்.

குடும்பமாய் நேரம் செலவிட காலம் அளித்தேன்

உதவும் கரங்கள் உண்டு என்பதை உறுதியாக்கினேன்

மனித நேயத்தை வளர்த்தேன் காத்தேன்

மனிதனின் படைப்பாற்றலை தனித்திறமையை வீட்டிலிருந்தவாறே செய்ய வைத்தேன்


எனினும் மன்னித்துவிடுங்கள்

உங்களைச் சிரமப்படுத்தியதற்கு


பலர் இறக்கக் காரணமானேன்

பலர் துன்புற காரணமானேன்

பல இழப்புகளுக்குக் காரணமானேன்

பல ஏமாற்றங்களுக்குக் காரணமானேன்.


சென்றுவிடுகிறேன் சில நாட்களில்

திரும்புவீர்கள் இயல்பு வாழ்க்கைக்கு

எனினும் நன்றாய் நல்லவர்களாய் வாழுங்கள்

இல்லையேல் எச்சரிக்கை இல்லையேல் திரும்பி வருவேன் மாற்று (மறு) உருவாய்….

Tagged in : change, quarantine, relief, covid, CORONA,

   

Similar Articles.