Loading...

Articles.

Enjoy your read!

கிடைமனிதன்

மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என

எப்பொழுதும் கட்டுப்பாடுகள்

 

மேயும் புல்லோடு மேற்கொண்டு

பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என

தினந்தோறும் மேந்தீனிகள்

 

நல்லநாள், பெரியநாளில்

கண்மாயில் கும்மாளம்

உடல் முழுக்க அலங்காரம்

 

ஈன்றது கிடேரியென்றால்

கறந்த பாலில் கன்றுக்கு போக

மீதி வீட்டாருக்கு - இதுவே

ஈன்றது காளாங்கன்று என்றால்

வீட்டினர்க்கு போக மீதி காளைக்கு

என்ற வரம்புகள்

 

காலில் லாடம், காதில் வளையம்,

கழுத்தில் மணி என மேனிகளில்

 

நேரான கொம்பு, சீரான  வால்கன்னி,

அழகான திமில், நறுக்கிய காது

போன்ற கவனிப்புகள்

 

உண்ணி புடுங்கி, தடவிக்கொடுத்து

பாசம் காட்டி பக்குவம் பார்க்க

ஆட்கள் ஆயிரம்

 

என எதுவும் இல்லாமல்

கிடப்பவை தான் கிடைமாடுகள்

மாடுகளில் மட்டுமல்ல

மனிதர்களிலும் கிடைமனிதர்கள்

இருக்கவேசெய்கிறார்கள்.

Tagged in : common man, Tamil, kidaimanithan,

   

Similar Articles.