Loading...

Articles.

Enjoy your read!

கிறுக்கல்

உலகை மாற்றப் போகும்

பொறியாளன் நீ!

ரெளத்திரம் பழகிடு…தோழா!

சரித்திரம் படைத்திடு…தோழா!

 

விழித்து கொண்டே

கனவு காண்.

அதற்கு பெயர்தான்

தன்னம்பிக்கை.

 

உன் சிறகுக்கு

வானமே அடிமை,

உன்னை நம்பினால்

எவரெஸ்டும் எலிகுகையே!

 

தேர்வு தோல்விக்கு

மனம் கலங்காதே!

மனம் கலங்கியிருந்தால்

இங்கு ஏது எடிசனும்

கலாமும்?

 

உடைந்த கண்ணாடியும்

பிரதிபலிக்கும்

உடைவது இயல்பு!

பிரதிபலிப்பதே உழைப்பு!

 

சாதனை என்றால் சத்தம் போடாதே

கற்றது கைமண் அளவே!

சோதனை என்றால் சோர்ந்து போகாதே

இதுவும் கடந்து போகும்!

 

பலகோடி மனிதரின்

வெற்றி பாதை

பார்த்த உலகிது,

உன் வெற்றி பாதையை

பலகோடி பேரை

பார்க்க வைத்திடு!

 

போற்றுவார் போற்றட்டும்!

தூற்றுவார் தூற்றட்டும்!

நீ நீயாய் இரு.

 

என்றும் பாதையை

தேடாதே உருவாக்கு!

பின் உலகமே

உன் பாதையில் தான்!

 

உளி விழுவது வலி

என அழும் கற்கள்

சிற்பங்களாவதில்லை!

 

உன் எழுத்தாணி மண்ணை பார்க்கட்டும்

உன் எண்ணங்கள் விண்ணை நோக்கட்டும்

 

தோழா…

விழ விழ எழு!

ஒன்றாய் விழுந்தால்

ஒன்பதாய் எழு! 

 

Tagged in : Sports, Goutham Kumar, My space, Keshav R Bhat, Tamil, பால ரூபன்,

   

Similar Articles.