நாளை நாளை என்று ஆயிரம்
நாளை கடத்திவிட்டோம்
சுமைகள் தீர்ந்தபாடு இல்லை!
ஒரு படி முன்னே
மறுபடி பின்னே
இந்த காலத்தின் வாழ்க்கை
அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான்
மழை வரும் வரை நெல் பயிர்க்கமாட்டேன்
என்ற மூடத்தனமான பிடிவாதம்!
மழை வந்த பின் ஏன் முன் பயிர்க்கவில்லை
என்ற குற்றஉணர்வுதான்!
எண்ணங்களின் விழும்பில் சிக்கிக்கொண்டு
நிகழ்வதை ஏற்க மறுக்கிறோம்
கடின வயதில் இருக்கிறோம் வாழ்க்ககையில் அல்ல!
வாழ்க்கை நமக்கு சொல்லாதது இதுதான்
இன்றே நாளையின் எண்ணத்தில் வாழ்ந்து
நாளை இன்றின் தவறுகளைத் திருத்த முடியாமல் வாடுகிறோம்.
நாளை நினைப்பதை விட்டுவிட்டு நிகழ்வதில் செல்வோம்
இனி இன்றே முழுதாய் வாழ்ந்திடுவோம்
ஒரு வேளை
நாளை
இல்லை என்றால் ?