இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை பெற்று திகழ்கிறது .அதில் 1794ஆம் ஆண்டு உருவான கிண்டி பொறியியல் கல்லூரி என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இயந்திர பொறியியல் பிரிவு ,கிண்டி பொறியியல் கல்லூரியின் மிக தொன்மை வாய்ந்த பிரிவாகும்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே மிக தொன்மை சிறப்பு வாய்ந்த ஒரு பிரிவாக கொண்டாடப்படுகிறது.1894 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் உருவாக்கப்பட்ட இயந்திர பொறியியல் பிரிவு,இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான சிறப்பான கற்றல் மற்றும் ஆய்வு வசதிகளை வழங்குவது மட்டுமின்றி எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு பிரிவுசார் ஆலோசனைகளை அளித்து வருகிறது.
இயந்திர பொறியியல் துறை, பொருட்கள் வடிவமைப்பு மற்றும் தாயாரிப்பு பற்றிய சர்வதேச மாநாட்டினை (ICMDM 2016) ஏற்பாடு செய்திருந்தது .அதன் ஆய்வு நோக்கமாக பொருள் ,வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறை துறையில் உள்ள தற்போதைய போக்குகள் குறித்த தலைப்புகள் கையாளப்பட்டது .
இம்மாநாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள TAG அரங்கத்தில் பிப்ரவரி 17, 2016அன்று சிறப்பாக நடைப்பெற்றது .டாக்டர் P.சிவக்குமார், புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் CVRDE யின் இயக்குனர் மாநாட்டினை தொடங்கி வைக்க ,அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் M.ராஜாராம்,பதிவாளர் பேராசிரியர் டாக்டர் S.கணேசன், முதல்வர் பேராசிரியர் டாக்டர் P.நாராயணசாமி மற்றும் இயந்திர பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் B.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாநாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை பேராசிரியர் V.S செந்தில்குமார் அவர்கள் மாநாடு குறித்து அவையோர்க்கு விவரித்தார்.இணை பேராசிரியர் டாக்டர் K.சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து தலைமை உரையினை அண்ணா பல்கலையின் துணைவேந்தர் டாக்டா் M.ராஜாராம் வழங்கினார்.சிறப்பு அழைப்பாளர் டாக்டர் P.சிவக்குமார் தம் தொடக்க உரையின் மூலம் ஒளிபரவ செய்தார்.
அண்ணா பல்கலையின் பதிவாளர் டாக்டர் S.கணேசன் மற்றும் முதல்வர் டாக்டர் P. நாராயணசாமி ஆகியோர் மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் M.பிரதீப்குமார் நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்.
இம்மாநாடு பிப்ரவரி 17 தொடங்கி பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் துறை வல்லுனர்கள் பேராசிரியர் டாக்டர் K.Aபத்மநாபன்,பேராசிரியர் டாக்டர்.முஸ்தபிஷூர் ரகுமான் ,பேராசிரியர் டாக்டர் ஹெல்மெட் உல்ப்,டாக்டர் B.P கௌதமன்,டாக்டர் I.விஜயராகவன் ,டாக்டர் H.Kசிவானந்த் ஆகியோர் தங்களது துறை சார்ந்த அறிவு மற்றும் அனுபவங்களை பகிரந்துகொண்டனர்.
மாநாட்டின் தலைப்பு 30 பகுதிகளாக வகுக்கப்பட்டு கலந்தாய்வு செய்யப்பட்டது.இம்மாநாடு இயந்திர பொறியியல் துறையின் மற்றுமொரு சாதனையாகும்.