உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை,
ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை.
வெறும் வகுப்பறைகளாய் இருந்திருந்தால்,
விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன்.
களிப்பின் கருவறைகளாய் மாறியதால்,
கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி.
புத்தகங்கள் கூட, புன்னகைத்து பார்க்கின்றேன்;
திரும்பப் புன்னகைக்காமல் திரும்ப மாட்டேன் நான்.
பெருமைக்காக மட்டும் இங்கே படிக்க வந்தேனோ?
மறந்து கலக்கிறேன் இவ்வுலகின் ஓர் அங்கமாக
எங்கும் இளமையின் வாசம்;
இனி இல்லை வேறு சிறந்த தேசம்.
இங்கே இல்லை கிண்டல் கேலி,
மாணவர்களைக் காக்கும் நீயே நல்வேலி
ஊட்டுகின்றாய் அறிவுப்பால் நித்தம்,
விழுந்துக்கொடுப்பேன் உன் கால்களில் முத்தம்.
உன் ஒவ்வொரு பாதையிலும் நடந்து திரிந்தேன்,
இச்சொர்க்கத்தை ஆள்பவன் நான்தான் என்பதுபோல்.
மாணவர்கள் நேசிக்கும் தாய் நீ,
மாணவா்களை நேசிக்கும் தாயும் நீ.
குறை சொல்ல ஏதுமில்லை,
சொன்னால் நன்றி எனக்கில்லை.
எவரும் எதிர்பார்க்கா சொர்க்கம் இது
இதைக்காட்டிலும் மேலான கல்லூரி எது?
எனக்கு வேண்டிய அனைத்தையும் அள்ளித் தந்தாய்!
அன்னப்பறவையாய் வலிகளை மட்டும் வடிகட்டி.
என்னை இங்கே சேர்த்தது
விதியோ, நேரமோ,சூழ்நிலையோ,
எதுவாயினும் அதற்கு நன்றி!
கல்லூரிக் காதல் கதைகளுக்கில்லை பஞ்சம்,
கல்லூரியின் மேலேயே காதல் கொண்டதால்
ஆனாய் என் தஞ்சம்!