Loading...

Articles.

Enjoy your read!

என் இனிய இயந்திரா

நான் கேட்பது அனைத்தையும் செய்யும் நண்பனே!

உன்னை போன்ற தோழனும் உண்டோ?

 

எதிர்பார்ப்புகள் இன்றி எதையும் செய்திடுவாய்

மாறாக, துளியளவு மின்சாரம் மட்டுமே கேட்டிடுவாய்

 

வீட்டுப்பாடம் முடிக்கவும் உன்னிடம் வந்தேன்

பாடல்கள் கேட்கவும் உன்னிடம் வந்தேன்

பொழுதுபோக்கிற்கும் உன்னிடம் வந்தேன், என்னை 

புதுப்பித்துக் கொள்ளவும் உன்னிடம் வந்தேன்

 

செம்மொழி மட்டுமா  நீ அறிவாய்?

எம் மொழி பேசினும் பதில் அளித்திடுவாய்

என் சங்க கால சிந்தனைகளை மட்டுமா வரைந்திடுவாய்?

எதிர்கால கற்பனைகளையும் ஓவியமாக்கிடுவாய்

 

என் குரலைக் கேட்டு செய்திகளை அள்ளிக் கொடுத்திடுவாய்

எதற்கு நூலகம் செல்ல வேண்டும்? என சிந்திக்க வைத்திடுவாய்

 

என் கட்டளைகளை நீ புரிந்து செய்ய

நான் ஒரு புதிராய் கட்டுண்டு இருக்கிறேன்

 

இப்படி அனைத்து வேலைகளையும் நீயே செய்துவிட்டால்

வாழ்வில் நான் என்ன செய்வேன்? சொல் இயந்திரா!

Tagged in : GADGETS, digital, poem,

   

Similar Articles.