நான் பகலாக இருக்க,
பகலவனாக உன்னை அழைத்தேன்;
பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!!
சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு
கவிழ்ந்தது, கலங்கரை விளக்கு அணைந்ததால்!!!
பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள்,
இனி என்றும் அம்மாவாசை இரவாக மட்டுமே இருக்கட்டும் என்று நினைத்தது போல என் நிலவு!!!
மதுவந்தி ராகத்துடன் துடித்த என் இதயம், சோக ராகத்துடன் துடிக்கிறது,
உனக்குக் கேட்கிறதா?
என் இதயமும் கல்லறை ஆனது, என் காதல் சடலமாகிக் கொண்டு இருக்கும்
இக்கணத்தில்!!!!
கானல் நீராக காணாமல் போனது என் காதல்!!
இதைக் கண்டும் காணாமல் உன் மனமும் இருப்பதேனோ??
ரயில் தண்டவாளத்தில் ஒரு பக்கம் நானாக,
மறு பக்கம் நீயாக என்று நினைத்துகொண்டு நான் இருந்த காலத்தில்
என் காதல் ரயிலாக பயணம் செய்தது,
ஆனால் இப்போது பயணிக்க வழி இல்லாமல், தான் சென்று அடையவேண்டிய இடத்தை அடையாது
பாதியில் பயணமும் முடிந்ததேனோ!!!!!
இலையானது செடியை விட்டு ஒருநாள் உதிரத்தான் போகிறது, எனினும் மலரின் பாதுகாப்பாக தன் வாழ்நாளை நகர்த்தும்;
என் மனமோ ஒரு இலையாக,
நீயோ ஒரு மலராக!!!!!