உன்னுள் அழகிய கூட்டில் சிறு கருவாய் தோன்றி, நாட்கள் கடந்து போக "பாசம் என்ற பெயரில் அமுது உண்டு உன்னுள் இருக்கும் கருவிற்கு வடிவம் தந்தாய்".
பிரசவ வலி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்தது இல்லையே நான், அம்மா.
மற்றோர் சொல்லிக் கேட்டு இருக்கிறேன், படத்திலும் பார்த்திருக்கிறேன், எவ்வளவு கடினம் என்று.
வலியை பொறுத்துக் கொண்டு எனை ஈன்றெடுத்தாய்;
தொப்புள் கொடி உறவால் இனைந்து;
இந்த அழகிய உலகிற்கு உமது குழந்தை எனும் உறவின் சொல்லால் அறிமுகம் படுத்தினாயே அம்மா!
ஈன்றெடுத்த மகிழ்ச்சியில் வலிகளை மறந்து நான் அழுவதைக் கண்டு உன் இரத்தத்தைப் பாலாக்கி அமுது ஊட்டினாயே அம்மா.
உன்னை மறவேனோ ?!
"தாலாட்டுப் பாடி உறங்கவும் வைத்தாய்;
சீராட்டியும் வளர்த்தாய்
நீலா சோறும் ஊட்டினாய்;
என் பொன்முறுவலை கண்டும் மகிழ்ந்தாய்;
மழலை பேச்சால் "அம்மா" என்ற போது ஆனந்தமும் அடைந்தாய்;
உன் வாயை அசைத்து எனைப் பேச வைக்கவும் முயன்றாய்;
நடக்கவும் கற்பித்தாய்
தவர் இழைத்த போதும் கண்டித்தாய்;
கோபத்திலும் பாசத்தையே பொழிந்தாய்”
என் வாழ்வில் அனைத்தும் நீயே அம்மா!
உன்னிடம் தானே அம்மா கற்றுக் கொண்டேன் "அன்பு என்பதன் அர்த்தத்தை".
"நீ இல்லை என்றால் நான் இல்லை அம்மா! "