அம்மா
எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை
எத்தனையோ கனவுகளோடு
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி
ஈன்றெடுத்தாள் என்னை அன்று…
தனியாய் நின்று...
குடும்பப் பாரத்தைச் சுமந்து...
இன்ப துன்பங்களை எல்லாம் உன்
பிள்ளைகளுக்காக மறந்து…
எதுவும் எழுத படிக்கத் தெரியாத அவள்
இன்று என்னை
எல்லாம் தெரிந்தவளாய் மாற்றினாள்....
வறுமையில் வாடிய போதும்
தேகம் தேய்ந்த போதும்
தளர்ந்து விடாமல்
கல்லாய் மாற்றிக் கொண்டாள் மனதை!
தன் மகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக
கொடுமைகள் பல எனக்காய் சுமந்தவளே....
ஆடம்பர வாழ்க்கையை நினைக்காமல்
அழகாய் வாழ கற்றுத்தந்தவளே....
சுயமரியாதை உன்னை விட்டுப் போகாது
சுயமாய் உழைத்து
சுகமாய் வாழ வைத்தவளே!
அம்மா நீ இல்லையென்றால்
நான் இங்கு அனாதை
இன்று நீ நினைத்ததைப் போல் படிக்க வேண்டும் என்பதற்காக
உன்னை பிரிந்து வாடும் உன் அன்பு மகள்….