வார்த்தையில் அடங்கா காவியம்
வர்ணத்தில் நிறையா ஓவியம் …!
வாடகையே இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய்
நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய்
தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம் இழந்து
வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை உணர்ந்து
மகிழ்ந்திருந்தாள் என் அன்னை
மறக்கமாட்டேன் நான் உன்னை
மாதம் ஏழு ஆனபோது வளைகாப்பு தரித்தாள்
பக்குவமாய் தன்னுளே என் உயிரை வளர்த்தாள்
மாதம் பத்து ஆனதடா, நேரம் வந்து சேர்ந்ததடா
பனிக்குடமும் உடைந்து பூமியிலே நான் விழ
உன்னைப் பிரிந்த துயரத்தில் வீரிட்டு நான் அழ
உயிர்துடித்து உயிர்கொடுக்கும் பிரசவத்தின் துவக்கம்
அறிவேனே நானும் அந்த வலியின் ஏக்கம்
எந்தத் துன்பத்திலும் வெறுத்ததில்லை என்னை
கடவுளாய் நான் பார்க்கும் என்னுடைய அன்னை !