Loading...

Articles.

Enjoy your read!

ஐ.வி யும் நாங்களும் - பாகம் 1

ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக

இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ்

க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை

முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில

நாட்களிலேயே, சொல்லாமல் வருகிற சுனாமி போல, ஃப்ர்ஸ்ட்

அஸெஸ்மெண்டும் வந்தது.ஆனால் இம்முறை சுனாமியுடன் பூகம்பமும்

வந்தது.இண்டர்னும் அஸெஸ்மெண்டும் எங்களைப் பின்னிப்பிணைய,

'ஐவி' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.'பரிட்சை கெடக்குது பாஸ்

கழுத,போடுங்கய்யா ப்ளான'என்று சிலரும்,'எங்களுக்கு இண்டர்ன்தாய்யா

முக்கியம்' என்று பலரும் இருந்தனர்.

ஓரிரு இண்டெர்ன்களில் சோர்ந்தவர்கள் சலசலப்பு நீங்கிய தண்ணீரைப்

போல் மறுபடியும் வழிக்கு வந்தனர்.பல விவாதங்களுக்குப் பிறகு 'கோவா'

தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.எந்த நேரத்தில் எடுத்த

முடிவோ ,தொடங்கிய நாளிலிருந்தே தொல்லை தான்.'கோ வா?

வேணாமா? கோ வா? வேணாமா?'என்று கோவா எங்களைப் படுத்திய பாடு

அப்பப்பா...!

எங்களுக்குக் கல்லூரி வைத்த முதல் செக்-துணை பேராசிரியர் ஒருவருடன்

தான் ஐவி செல்ல வேண்டுமென்பது.திடீரென்று துணை பேராசிரியருக்கு

நாங்கள் எங்கே போவது?! பற்பல கடினங்களைக் கடந்து 'எங்கள்

ஆசானைக்' கண்டெடுத்தோம்.

இரண்டாவது நாங்களே பின்னிக்கொண்ட சிலந்தி வலை

எனலாம்.மாணவியர் இருக்கும் க்ளாஸை'கோவா'வுக்கு அனுப்புவார்களா?

மாட்டார்களா? இல்ல அதுக்கு ஏதாவது அறிகுறி இருக்கா?என்று நாங்கள்

கேட்காத ஆளில்லை.இருந்தும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்

கொள்ளவில்லை.

ஐயங்களையும் அச்சங்களையும் களைந்து,கடைசியாக 'கோவா'வுக்குச்

செல்ல அனுமதியும் பெற்றோம்.க்ளைமாக்ஸ் வந்தும் முடியாத படம்

போல,எங்கள் ப்ளானில் வந்து நின்றது இன்னொரு பனிப்பாறை -

'டிக்கெட்ஸ்'

ஒரு வாரமே இருக்கும் நிலையில்,'டிக்கெட் எடுத்தே ஆகணும்,போயே

ஆகணும்'என்று கபாலி பட ஃபீலிங் எங்களில் எல்லோர்க்கும்.க்ளாஸில்

தோழி ஒருவர், இரயில்வேயில் சிபாரிசு இருக்கு என்று கூற,சென்ட்ரல்

இரயில் நிலையத்தின் காலை வனப்பைக் காணச் சென்றிருந்தேன்.

எட்டு மணி அளவில்,ரிஸர்வேஷன் ஆஃபீஸை அடைந்த நான்,சென்னை

வாசியாய் இருப்பினும், அன்று நாடோடி போல,பார்ப்பவரிடம் எல்லாம் வழி

கேட்கலாயிற்று.கடைசியாக மூன்றாவது தளத்தை அடைந்தேன்.அங்கு

சென்று,'ராம்குமார் இருக்காரா?கல்வி சுற்றுலாவிற்கு டிக்கெட்ஸ் பற்றிப்

பேசணும்' என்று நான் கேட்க இராஜ மரியாதை கிடைத்தது.ஒய்யாரமான

சோஃபாவில் என்னை அமர்த்திவிட்டு,'நீங்கள் கேட்கும் ட்ரெய்னில்

டிக்கெட்ஸ் இருக்கிறதா?' என்று கேட்டனர்.'இல்லை'என்று

பதிலளிக்க,'கவலை வேண்டாம்,செய்திடலாம்'என்று உறுதி கொடுத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நான் தேடிவந்த ராம்குமாரை அலைப்பேசியில்

அழைத்து,என்னிடம் கொடுத்தனர்.அலைப்பேசியில் நடந்த உரையாடல்-

'ரோஷிணியின் தோழி பேசுகிறேன்' 'யார் ரோஷிணி?','கோதண்டபாணி

ஸார் உங்களை ரெஃபர் செய்தார்','யார் கோதண்டபாணி?','ராஜன் ஸார்

ஃப்ரெண்ட்!','ராஜனா?' 'ராஜன் ஸார் மகளின் தோழி தான் நான்'.'நான்

தான் ராம்குமார்.ஆனால் யாரம்மா இந்தக் கோதண்டபாணி?'என்று

பரிதாபமாகக் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.தோழிக்கு

அழைத்தேன்.'யாரடி கோதண்டபாணி?ராம்குமார் ஸார்க்கும் அவர்க்கும்

என்ன சமந்தம்?'என வினவினேன்.'ராம்குமாரா,அவர் பெயர்

ராஜ்குமார்'என்று அவள் பதிலளிக்க,விளைவு மூன்றாவது மாடி

சோஃபாவிலிருந்து இரண்டாவது மாடி கௌண்டருக்கு அழைத்துச்

செல்லப்பட்டேன்.ராம்குமாரே நமக்குத் தெரிந்தவராக இருக்கக் கூடாதா

என்ற ஏக்கத்துடன் காத்திருந்தேன்.

ஒரு வழியாகப் பிற க்ளாஸ்மேட்களும் வந்துவிட, ராஜ்குமார் ஸாரின்

மனைவி எங்களுக்கு உதவ முற்பட்டார்.இல்லாத டிக்கெட்டை வரவைக்க

முடியாது என்றும்,'கோச் ஆட்' செய்து முன்பணத்தைத் திரும்பப்

பெறுவதற்குள் ஆயிசு முடிந்துவிடும் என்பதையும் எங்களுக்குத்

தெரிவித்தார்.நிலைமையறிந்து ப்ளான்களை மாற்றி,டிக்கெட் இருக்கும்

வழியைத் தேர்ந்தெடுத்தோம்.'பல்க் புக்கிங்'செய்வதற்கான கன்செஷன்

ஃபார்முடன் கல்லூரியிலிருந்து நண்பர்கள் வருவதற்குள் மணி இரண்டு

ஆகிவிட்டது.எங்களுக்கு இருந்த ஒரே பிடிப்பும் 'ட்யூட்டி' முடித்துச்

சென்றுவிட,'மறுபடியும் முதலிருந்தா?'என்ற எண்ணவோட்டம் எங்களில்

எல்லோர்க்கும்.இம்முறை எங்களுக்குப் புதிதாக ஒரு ப்ராஸஸை முன்

வைத்தனர்.எல்லாம் தயாராக இருக்கிறதென்று பெருமூச்சி விட்ட நேரம்,ஒரு

புதிய கோப்பினை எங்களிடம் கேட்டனர்.அன்று மாலை மேல்தட்டு

பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இண்டெர்ன் இருந்ததால்,அந்த

கோப்பினைக் கல்லூரியிலிருந்து எடுத்து வர எங்களுக்கு யாருமில்லை.'அந்த

டாக்யூமெண்டை எப்போ வாங்கி,நாங்க எப்போ ஐவி

போறது,போங்கய்யா'என்ற நிலைக்கு எல்லோரும் வந்துவிட்டோம்.

மனம் சோர்ந்த நேரம் தோழி ஒருத்தி, எனக்கு அழைத்து,'சாப்டியா?' என்று

எங்கள் நிலையறிய முற்பட்டாள்.நான் எதார்த்தமாக,' உன்னால் ஒரு

டாக்யூமெண்டை எங்களுக்கு எடுத்து வர முடியுமா?'என்று கேட்க,நிமிட

நேரங்களில் 'பைக் கீ' கை மாறியது.எங்கள் மனமும்

தான்.புத்துணர்ச்சியுடன் தோழிக்காகக் காத்திருக்க, உடல் நலமில்லா

அத்தோழி,அத்துணை சிரமத்துடன் ,மற்றொரு தோழியுடன் நிமிட

நேரங்களில் வந்தடைந்தார்.அந்நொடி,எங்கள் வகுப்பு மாணவிகள் 'சூப்பர்

ஹீரோக்கள்' ஆகக் காட்சியளித்தனர்.

ஒரு வழியாகக் கோப்புகள் அனைத்தும் தயாராக இருக்க,புக்கிங் செய்யும்

அலுவலர்,'நீங்க கோவா போறதுக்குள்ள நான் கோவா போயிட்டு வந்தளவு

டையர்ட் ஆகிட்டேன்'என்று சலித்துக்கொண்டே,எட்டு மணி அளவில்

டிக்கெட்களை எங்களிடம் ஒப்படைத்தார்.

ஆம்.நாங்கள் எங்கள் வாழ்வின் பொன்னான ஐந்து நாட்களை

நோக்கி,பயணத்தைத் தொடர்ந்தோம்...

Tagged in : My space, Agnes Maneesha, Neevatha Babu, Tamil, நந்தினி மீனாட்சி,

   

Similar Articles.