தொன்மையிலும் தொன்மை;
தன்மையினில் செம்மை;
யாவர்க்கும்எ ளிமை;
புண்படுத்தாத புலமை;
எங்கள் மெல்லிசை தமிழ்,
என்றென்றும் மேன்மை;
ஈர்க்கும் தன்மை;
ஈடில்லா பெருமை;
நடிக்கும் நாடகத்தமிழே, நலமா?
கவலை நீக்கும் கன்னித் தமிழே,
ஏதும் கலக்கமா?
இலக்கணம் பேசும் முதுமை தமிழுக்கு
முதுகு வலியா?
துள்ளித் திரியும்
இளமைத் தமிழுக்கு காலில் சுளுக்கா?
குறள் கூறும் இரண்டடி தமிழுக்கு,
தொண்டை வலியா?
இல்லை,
தமிழினை பேசுவோர்க்கு தான்
தொண்டை வலியா?
செம்மொழி பேச ஏன் சிந்தனை, சிக்கல்?
தமிழ் பெருமை, சொல்கிறேன் கேளுங்கள் !
உண்மையை உணர்த்தும்
ஒற்றுமையை உண்டாக்கும்
இனிமை, இளந்தென்றலாய் வீசும்
கவிதைகள் காற்று வழியே பேசும்.
உவமைகள் ஊற்று நீராய் பெருகும்.
உணர்வுகளை வரிகளுக்குள்ளே பதுக்கும்.
ஊடல் கொண்ட உள்ளத்திலும்
காதல் வந்த காலத்திலும்
வருணனைகளோடு
வரிகளும் நீளும்.
கம்பன் காவியத்திலும்,
கணினி காலத்திலும் ,
புறநானூறு புயலடிக்கும்;
புதுக்கவிதை மழையாய் பொழியும்;
"மொழி வளர்ப்போம்
இனம் காப்போம்".