சொல்லிக் கொண்டிருந்தது போதும்
செய்யத் தொடங்குவாய் நீயும்.
வீழ்ந்து கொண்டிருந்தது போதும்
எழத் தொடங்குவாய் நீயும்.
தோல்வியுற்றது போதும்
வெற்றி பெறத் தொடங்குவாய் நீயும்.
உறங்கியது போதும்
விழித்தெழுவாய் நீயும்.
அழுதுக் கொண்டிருந்தது போதும்
சிரிக்கத் தொடங்குவாய் நீயும்.
செத்த வாழ்க்கை வாழ்ந்தது போதும்
உயிரோடு வாழ்வாய் இனி எப்போதும்…
சிலவற்றை நாடு
பலவற்றைத் தேடு
முடக்கிவிடாதே முயற்சியை
விட்டுவிடாதே பயிற்சியை
பிறரை எப்போதும் நேசி
சற்றே பழகும் முன் யோசி
முயன்ற வரை ஓடு
முடியாவிட்டாலும் பாடுபடு
வாழ்க்கை ஏணியில் சுறுசுறுப்புடன் ஏறு
அதனால் வாழ்க்கையில் முன்னேறு.
கஷ்டப்படுவதால் உனக்கு நஷ்டம் ஏற்படாது
பணத்தால் மட்டுமே புகழ்வந்து சேராது.
வாழும் போது நல்லவன் எனப் பெயர் கொள்
வாழ்ந்த பிறகு சாதித்தவன் என்ற பெயரையும் சேர்த்துக்கொள்.