Loading...

Articles.

Enjoy your read!

தமிழா தமிழா நாளை நம் நாளே !

மேக வானில் உலவும் நிலவே!
சோக இரவில் விழிக்கும் கனவே!.
தேகம் நனைக்க ,பெய்யும் மழையே!
கிளையிலிருந்து விடைபெறும்  இலையே!!

கனியப்போகும் மொட்டுக்களே..
விடியப்போகும் இரவுகளே
மறைய போகும் விண்மீண்களே
மாயப்பிறந்த  மனிதர்களே..
செவி சாயுங்கள் ;எங்கள்,
செம்மொழியின் சிறப்பை ,
சொல்கிறேன்;
பதில் சொல்லுங்கள்  கேள்வியோடு 
முடிக்கிறேன்;

மண்ணுக்கும் முன் தோன்றி
தமிழனுக்கு மொழியாகி
பல மொழிகளுக்கு தாயாகி,
மாற்றங்களுக்கு உள்ளாகியும்,
மறையாத மொழி முதுமொழி 
முத்துமொழி !

மூவேந்தர் பெருமைகளையும்,
முல்லை நில சிறப்புகளையும்;
கம்பன்,வள்ளுவனையும்,
கண்ணகியின் அக்னியையும்,
பாண்டவர்களின் பாஞ்சாலியையும்
அகத்தியனின் தொல்காப்பியத்தையும்
அபூர்வமான அறிவியலையும்

எண்ணற்ற புத்தகங்களையும் 
எண்ணிலடங்கா எழுத்துக்களையும் 
தன்னகத்தே கொண்ட 
என் அன்னை தமிழ்,
பழமை எனினும் பசுமை ;
நதியாய் எழுத்துக்கள்
கடலை மிஞ்சும் சொற்கள்
நூற்றாண்டுகள் கடந்தாலும்

நுரையாய். கரை ஒதுங்கும்
  நூல்கள் ;
இந்த வளமான மொழி
தமிழனின் தாய்மொழி 
இன்று தவிர்க்கபடுவதேன்
புறம் தள்ளப்படுவதேன்...

மொழி வளர்ப்போம்
இனம் காப்போம்;

                                   - தினகரன்.கு
                                 இரண்டாம் ஆண்டு
                                 இயந்திரவியல்

Tagged in : Tamil, தினகரன்.கு,

   

Similar Articles.