Loading...

Articles.

Enjoy your read!

தீர்ப்பு

 ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை  எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.

 

 இனியா வாதாடத் தொடங்கினாள். இங்கு எதிர்த்தரப்பில்  இருக்கும் இவர் தான் சத்தியமூர்த்தி, புகழ் பெற்ற தொழிலதிபர். இவர் இந்த உலகிற்கு ஒரு தொழிலதிபரைப் போல் காட்டிக் கொண்டு, மறுபுறம் இரகசியமாக பல்வேறு சட்ட விரோதமான செயல்களைச் செய்து வருகிறார். அதில் ஒன்று தான், இந்த போதைப் பொருள் விற்பனை. இதனால் தான் என்னவோ இவர் மனைவி இவரைப் பிரிந்து வாழ்கிறார். இனியா பேசியதைக் கேட்ட நீதிபதி, அவர் குடும்ப கதை எல்லாம் வேண்டாம், அவர் என்ன குற்றம் செய்தாரோ அதை மட்டும் சொல்லு என்று கூற, அதற்கு இனியா 25.08.2023 அன்று அவர் ஒரு பூங்காவின் வெளியே ஒரு மகிழுந்தில் போதைப் பொருள் கைமாற்றும்போது காவல்துறை அதிகாரி தினேஷ் அவரை பிடிக்க முயன்றார் அப்போது அவரை மகிழுந்தில் இடித்துவிட்டுத் தப்பினார். இப்போது தினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 சத்தியமூர்த்திக்கு ஆதரவாக கிருஷ்ணன் வாதாடினர். 25.08.23 அன்று சத்தியமூர்த்தி உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் வீட்டிலிருந்ததாக கிருஷ்ணன் கூறினார். அவர் வீட்டிலிருந்ததற்கு ஆதாரமாக அவர் வீட்டில் வேலை பார்க்கும் ராணி என்ற பெண்ணை அழைத்தார். ராணியும் 25 அன்னிக்கு ஐயா வீட்ல தான் இருந்தாங்க என்று கூறினார். இனியா ராணியிடம், உங்க ஐயாகிட்ட எத்தன வருசமா வேலை செய்றீங்க என்று கேட்க, நா எங்க ஐயாகிட்ட 5 வருசமா வேலை செய்றங் மேடம் என்று ராணி சொன்னார். இனியா ஓ! அப்டிங்கலா! உங்க ஐயாக்கு எண்ணலாம் சாப்பிட பிடிக்கும்னு சொல்லுங்க, கேப்போம் என்று மீண்டும் கேட்க, அவருக்கு நா வெக்கிற மீன் குழம்பும், நண்டு பொரியலும் ரொம்ப பிடிக்கும் என்றார். அதற்கு இனியா, சத்தியமூர்த்தி ஒரு சைவ பிரியர் அவருக்கு எப்படி அசைவம் பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இதிலிருந்தே தெரிகிறது ராணி ஒரு பொய் சாட்சி என்று. இதற்கு முன் சத்தியமூர்த்தியை விசாரிக்க அழைத்தபோது தான் ஒரு சைவ பிரியர் என்றார். இறுதியில் எல்லா தப்பையும் தான் செய்ததாக சத்தியமூர்த்தி ஒப்புக்கொண்டார். நீதிபதி அவருக்கு 10 வருட சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதித்தார்.

 

 10 வருட சிறை தண்டனை முடிந்தது.

 

 அவர் சிறையின் வெளியே வந்தவுடன் அவருடைய வழக்கறிஞர் அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்ல மகிழுந்தில் வந்தார். சத்தியமூர்த்தி எனக்கு மிகவும் தலை வலிக்கிறது எனக்கு டீ குடிக்க வேண்டும் என்றார். கிருஷ்ணன் அவருக்கு டீ வாங்க சென்ற போது சத்தியமூர்த்தி தன்னை சிறைக்கு அனுப்பிய இனியா மற்றும் அவரது குழந்தையை பார்க்கிறார். இனியாவை தலையில் அடித்து அவரோடு அவரது குழந்தையையும் கார் பின் புறத்தில் போட்டார். கிருஷ்ணனுக்கு இது எதுவும் தெரியாது. சத்தியமூர்த்தி கிருஷ்ணனை அங்கே உள்ளே ஒரு பழைய கட்டடத்துக்கு போக சொன்னார். அவரும் சென்றார். சத்யா அவர் கொண்டு வந்த டீயை குடித்துவிட்டு ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு உள்ளே சென்றார். அந்த குழந்தை அப்பா, அப்பா என்று சத்யாவை பார்த்து கத்தியது. இனியா மயக்கம் தெளிந்து எழுந்தாள். சத்யா நா சொல்றத பொறுமையா கேளுங்க அவ உங்களுக்கும் எனக்கும் பிறந்த குழந்தை. 25.08.23 அன்று தான் நீங்க டிரக்(drug) கொடுக்க வேண்டியது. உங்களுடன்  நானும் வந்தேன்.உங்க கார்ல தான் போனோம். அதுக்குள்ள தினேஷ்  (போலீஸ்) திடீர்னு வந்தாரு அதனால அவர்கிட்ட இருந்து தப்பிக்ரதுக்கு கார்ர திருப்பும்போது அவர் மேல வண்டி ஏறி அவருக்கு அடி பட்ருச்சு, உங்களுக்கும் தலைல அடி பட்டருச்சு என்று இனியா விளக்கினார். நீங்க என்ன பாத்து யாருனு கேட்டிங்க. உங்களுக்கு நம்ம கல்யாணம் பண்ணது எதுவுமே நியாபகம் இல்லாம போச்சு. உங்களோட ஒரு டிரக் டீலர் கிருஷ்ணன் பத்தி நியாபகம் இருந்துச்சு. உங்களுக்கு இப்படி நடந்தருச்சுனு நா ரொம்ப பயந்து அழுதேன். நா அப்போ கர்பமா இருந்தன். இத பத்தி கிருஷ்ணனிடம் பேசும் போது அவர் தான் இந்த திட்டம் போட்டாரு. நா உங்களுக்கு விவாகரத்து தந்த மாறி ஒரு போலியான சான்றிதழ் தயார் பண்ணிட்டு, என்னையே வாதாட சொன்னாரு உங்களுக்கு எதிராக அப்போ தான் குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும்னு சொன்னாரு. அதனால் நானும் வாதாடினேன். உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையும் வாங்கி கொடுத்தேன். அதன் பிறகு உங்களை சிறையில் ஒரு மருத்துவரை வைத்து பரிசோதனை செய்யும்போது உங்களுக்கு எதுவும் நியாபகம் வரல்லனு தெரிந்தது. பத்து வருடம் ஆகியும் உங்களுக்கு பெரிசா எதுவும் நியாபகம் வரல்ல. அது மட்டுமில்லாமல்,உங்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் ஒன்னு இருக்கு. நீங்கள் சுமார் 100000000 மதிப்புள்ள போதை பொருளை மறைத்து வச்சிருக்கிங்க. அது எந்த இடத்தில என்று இனியா  கேட்க, இத்தனை உண்மைகளை தெரிந்த சத்யா தலை சுற்றி போனார். 

 

இந்த இடத்தில் தான் போதை பொருளை வைத்துள்ளேன், என்று கூறிவிட்டு, இனியாவின் கயிற்றை அவிழ்த்து விட்டார். இருவரும் போதை பொருள் உள்ள இடத்தை கண்டுபிடித்துவிட்டனர். இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த இடத்திற்கு கிருஷ்ணன் குழந்தையுடன் வந்தார்.

 

 இருவரையும் பார்த்த கிருஷ்ணன், துப்பாக்கியை எடுத்து சத்யாவை பார்த்து நீட்டினார். சத்யாவும், இனியாவும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து போனார்கள். சத்யாவிடம் உள்ள துப்பாக்கியை கீழே போட சொன்னார்.  தான் ஓரு இரகசிய துப்பறிவாளன் என்றும் அந்த 100000000 மதிப்புள்ள  போதை பொருள் எங்கே உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் சத்யாவுடன் வேலைப் பார்த்ததாக சொன்னார். இதை கேட்டவுடன் சத்யா துப்பாக்கியில் சுட முயன்றார், கிருஷ்ணனை குறிப்பார்த்தார்.

 

அதற்கு கிருஷ்ணன் சற்று முன் நீங்கள் குடித்த டீ-யில் மயக்க மருந்து கலந்து விட்டேன் என்று சொல்வதற்குள் சத்யா மயங்கி விட்டார். இனியாவும் தலையில் அடிபட்டதால் மயங்கி விட்டார். கிருஷ்ணன்  அருகில் உள்ள காவல் துறையை அழைத்து நடந்ததை சொன்னார்.100000000 மதிப்புள்ள போதை பொருளை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலிசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். அந்த குழந்தையை கிருஷ்ணன் எடுத்து வளர்த்தார்.

Tagged in : Tamil, drugs, story,