Loading...

Articles.

Enjoy your read!

தர்மம்

செட்டிநாடு வீதியொன்றில் கீரை விற்று கொண்டு செல்கிறாள் ஒரு பெண் .வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய் ,கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள் ."ஒரு கட்டு கீரை என்ன விலை ?"என்று கீரை விற்பவளிடம்  தாய் கேட்டாள் .அதற்கு கீரை விற்பவள் "ஒரணாம்மா" என்று பதில் கூறினாள் .                                                

ஒரணாவா ? .அரையணா தான் தருவேன் என்றாள் ."இல்லம்மா வரதும்மா " என்றாள் கீரை விற்பவள் .    அதெல்லாம் முடியாது ,அரையணாதான்  தருவேன் என்றாள் .பேரம் பேசிக் கொண்டே இருக்கிறாள் அந்த தாய் . 

பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு ,மேல காலணா போட்டு கொடுங்கம்மா என்கிறாள் ."முடியவே முடியாது கட்டுக்கு அரையணா தான் தருவேன் " என்றாள் தாய் .கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம் "என்றாள் .பிறகு கீரைக்காரி நான்கு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டெனா காசை வாங்கிக் கொண்டாள் .கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள் ."என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா ?"என்று அந்த தாய் கேட்க ,இல்லம்மா போய் தான் கஞ்சி காய்ச்சினும் என்றாள் கீரைக்காரி ."இரு இதோ வர்ரேன் ",என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள் ,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும் அதற்கு தேவையான சட்னியும் வைத்து கொண்டு வந்தாள் ."இதை சாப்பிட்டு விட்டுப் போ " என்றாள் அந்தத் தாய் .

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் "ஏம்மா அரையாணவுக்கு பேரம் பேசுனீங்க .ஒரு இட்லி அரையணான்னு வச்சிகிட்டாகூட ஆறு இட்லிக்கு மூன்றணா வருதும்மா ?"என்று கேட்க அதற்கு அந்தத் தாய் ,"தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா "என்று நெத்தியடியாகக் கூறினாள் .
 

Tagged in : random story, dharmam, KIND,

   

Similar Articles.