Loading...

Articles.

Enjoy your read!

இழக்கப்பட்ட வரம்

                         தனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் ஆதங்கம் தாங்காது ஊரில் உள்ள சாமியை எல்லாம் திட்டிக்கொண்டே அறைக்குள் சென்று, மனைவியிடம் குழந்தையை வாங்கிக்கொண்டு வேகமா அங்கிருந்து புறப்பட்டார் சபாபதி. போகும் வழியில் இருந்த குப்பைத்தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு யாரும் பார்க்காத வண்ணம் அங்கிருந்து தப்பி மருத்துவமனைக்கு ஓடினார்தனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் ஆதங்கம் தாங்காது ஊரில் உள்ள சாமியை எல்லாம் திட்டிக்கொண்டே அறைக்குள் சென்று, மனைவியிடம் குழந்தையை வாங்கிக்கொண்டு வேகமா அங்கிருந்து புறப்பட்டார் சபாபதி. போகும் வழியில் இருந்த குப்பைத்தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு யாரும் பார்க்காத வண்ணம் அங்கிருந்து தப்பி மருத்துவமனைக்கு ஓடினார்.

தான் செய்தவற்றை எல்லாம் மனைவியிடம் கூறிவிட்டு , நம்முடைய குடும்ப சூழலுக்கு ஆண் குழந்தை தான் சரியாக இருக்கும் என்று சமாதானம் செய்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டனர் சபாபதியும் அவருடைய மனைவி வாசுகியும். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் நினைத்தது போலவே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனை நன்றாக வளர்த்து படிக்க வைத்து வரதட்சணைக்காக பெரிய இடத்துப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவ்வப்போது வாசுகிக்கு அவளுடைய பெண் குழந்தை பற்றிய ஞாபகம் வந்து செல்லும். அப்போதெல்லாம் நம் குடும்ப சூழ்நிலையால் தான் அப்படி செய்து விட்டோம் என்று சமாதானம் கூறுவார் சபாபதி. வருடங்கள் ஓடின. இவர்களின் மகன் மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இவர்களிடம் இருந்த பணம் நகை என்று அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்கிவிட்டு இவர்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்டான். ஆசையாக வளர்த்த ஒரே மகனும் தங்களை துரத்திவிட்டதை எண்ணி மனம் நொந்தார் சபாபதி. கோவில்களிலும் பேருந்து நிலையங்களிலும் நிழற்குடைகளிலும் தங்கி அன்னதானம் போடும் இடங்களில் உணவு உண்டு நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தனர். நாட்கள் செல்லச்செல்ல உடல்நலக்குறைவால் சபாபதியால் நடக்க முடியவில்லை. ஒரு வாரமாக இருவரும் பேருந்து நிலையத்தில் படுத்து இருந்தார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தினமும் அனைத்து ஊர்களிலும் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்துவந்தது. அந்த நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் இவர்களைப் பார்த்துவிட்டு அருகில் உள்ள அந்நிறுவனத்தின் காப்பகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு இவர்களை நன்கு கவனித்துக்கொண்டார்கள். நல்ல உணவும் தங்குவதற்கு அறையும் வழங்கப்பட்டது.

ஆசை ஆசையாக வளர்த்த ஒரே மகன் தங்களை தூக்கி எறிந்த நிகழ்வு அவ்வப்போது மனதை ரணமாக்கியது. சில மாதங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு அந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளித்து கொண்டிருக்கும் அந்நிறுவனத்தின் நிறுவனர் அங்கு உரையாற்ற வந்திருந்தார். அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். உரையாடலின் இறுதியில் நமக்கு யாரும் இல்லை என்று யாரும் எப்பொழுதும் வருந்தக் கூடாது. இங்குள்ள அனைவரும்  எனது சொந்தங்கள் நம்மோடு இறைவன் இருக்கிறான் என்று கூறினார். சொல்வதற்கு எளிமையாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள் உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் என்னையும் என் அம்மா அப்பா 24  வருடங்களுக்கு முன்னர் இங்குள்ள மருத்துவமனைக்கு வெளியில் உள்ள குப்பைத்தொட்டியில் தான் வீசிச் சென்றுள்ளனர். வழிப்போக்கர் யாரோ தான் என்னை காப்பகத்தில் சேர்த்துள்ளார். அனாதை என்பதற்காக நான் வருந்தவில்லை. இனி என்னை போல யாரும் ஆதரவற்று இருக்கக் கூடாது என்று நினைத்தேன். என் படிப்பாலும் கடின உழைப்பாலும் அதை சாத்தியமாக்கினேன். என் அப்பா அம்மாவிற்கு வேண்டுமானால் நான் தேவையற்று இருக்கலாம் ஆனால் இங்குள்ள  1000  பெற்றோர்களுக்கு நான் பெறாத பிள்ளையே என்று கூறி உரையை முடித்துக்கொண்டார். நாம் தூக்கி வளர்த்த பிள்ளை நம்மை தூக்கி எரிந்து விட்டது. நாம் தூக்கி எறிந்த அப்பெண் குழந்தை நம்மை தத்தெடுத்து வளர்க்கிறதே  என்று எண்ணி இருவரும் கண்ணீர் மல்க அவர்கள் தூக்கி எறிந்த மகளை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தனர்.

Tagged in : women, story, society,

   

Similar Articles.