Loading...

Articles.

Enjoy your read!

கனவை சிதைத்த போதை

ஒரு மாணவன் தனது ஊரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பத்தாம் வகுப்பை முடித்து விட்டு வேறு ஒரு  பள்ளிகளுக்கு அவன் 11 ம் வகுப்பு சேர வெளியூருக்கு செல்கிறான்.அவன்  அந்த பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் .அவன் வேறு ஒரு பள்ளிக்கு சென்றவுடன் அவனை போதைப்பொருளுக்கு அடிமையாக்குகிறார்கள் அவனுடன் படிக்கும் சக மாணவர்கள்.  ஆனால் அவன் அதனை ஏற்க மறுக்கிறான் ஆனால் அவனுடன் இருக்கும் மாணவர்கள் அவனை வலுக்கட்டாயமாக  போதைப்பொருள் உபயோக படுத்துமாறு கட்டாயம் செய்கிறார்கள். அவனும் வேறு வழி இல்லாமல் அதனை பயன்படுத்துகிறான்.

சிறிது காலம் சென்றதும் அவன் கஞ்சா,ஊசி போன்ற போதைபொருள் கள் விற்கும் வியாபாரியாக மாறினான்.  அது மட்டும் இல்லாமல் மதுபான கடை இல்லாத போது அவன் வீட்டில் வைத்து மதுபானங்களை வியாபாரம் செய்துவந்தான்.

ஒரு நாள் அவன் செய்து வந்த குற்றத்திற்காக அவனை காவல் துறையினர் கைது செய்தார்கள். அனுமதி இல்லாமல் கஞ்சா  விற்ற குற்றத்திற்காக NDPS Act (1985) சட்டத்தின் கீழ் அவனுக்கு ஜாமின் இல்லாமல் 5 வருடம் சிறை தண்டனையும், அவனுடன் இருந்த அவன் அம்மாவிற்கு தவறுகள் செய்ய உடந்தையாக இருந்த வழக்கில் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும்  வழங்கியது குற்றவியல் நீதிமன்றம்.

தண்டனை காலங்களில் அவனுக்கு போதைப்பொருள் எதுவும் கிடைக்காமல் அவன் மனநலம் பாதிக்கப்பட்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டான்.

போதைப்பொருள்கள்  பயன்படுத்துவது  தற்கால  இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாக  உள்ளது. ஆகவே அவ்வாறு  போதைப்பொருளுக்கு அடிமையாகும்  இளைஞர்களுக்கு தண்டனை வழங்காமல்  அவர்களுக்கு ஆலோசனை வழங்கி  போதைப்பொருளுக்கு அடிமையாவதில்  இருந்து மீட்கலாம்.  பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள் போன்றவற்றில் போதை விழிப்புணர்வு நடத்துவதன் மூலம் போதையில்லா  தமிழகம் மற்றும் போதையில்லா இந்தியாவை உருவாக்கலாம்.

Tagged in : say no to drugs, awareness, future india,

   

Similar Articles.