நீ நீரில் தேறினாய்
காற்றில் மெல்லசைந்தாய்
குறிஞ்சி முல்லை மருதம் என
பாகு பாடின்றி படர்ந்தாய்
வாழ்வில் நான் கண்ட பெருமையுள் நீ
வியந்து வினவிய புதுமையுள் நீ
கனவோடு வந்தேன் படிக்கத்தானென்று
கனவிலும் கண்டிலை உன்னை காணவேனென்று
நான் சோர்வுற்று அமர்ந்திருந்தேன் வெகுதூரத்தில்
சோகத்திலும் நிமிர வைத்தாய் உன் உயரத்தில்
பார்த்தேன் உனையே கம்பிரமாய்
கண்டேன் எனையே உற்சாகமாய்
எனக்கென இருதத்தவன் நான்
உனக்கென இருந்திராமல்
எனக்கென வந்ததும் நீ…
அடை மழையோ; வெயிலோ,
அனல் வெயிலோ;காற்றோ,
புயல் காற்றோ; இடியோ,
பல இன்னல்களோ வந்திடினும்
அசைந்தாய் நெளிந்தாய் மாளவில்லையே
தனித்து தெளிவுற நின்றாய்
உன் தன்மை இதுவென சொன்னாய்
தேடினேன் புதுக்கவிதை உன்னை வர்ணிக்க
உன் பேராயுள் தொடங்கியது என்னை வஞ்சிக்க
ஆமாம் சொல்கிறேன் பல நூறு பொய்கள்
இல்லையேல் உன்னை பற்றி அனைத்திராது இவர் கைகள்
கண்டறிந்தேன் பாரிலே ஓர் உண்மை,
இங்கில்லை எதற்கும் அழகின்மை
கண்டறிய தன் கண்ணை ஈட்டாதவர்
புகழவே தீட்டினேன் இக்கைவண்ணத்தை
மேற்கண்ட யாவும் கூறியது நீங்கள் ரசிக்கவே
ஆனால் நான் கண்டேன் ஒரு புதுமை இம்மரத்திடமே
அதை கூறிட நான் விழைந்தேன்
ஐயோ! மன்னியும், அதில் அழகு இல்லை - நீர் ரசிக
நான் என் சேர்ப்பேன்
பொய் கூறி உன்னை ஈர்க்கும் தரத்தில் இல்லை என்மரம்
பல நாட்கள் பிரிந்தும் உயிரீர்த்தது பெருமரம்
கண்டறிந்தேன் நெடுவளர்ந்த
என் பல்கலைக்கழகத்தில் ஒரு பனைமரம்...