Loading...

Articles.

Enjoy your read!

பேராசை என்னும் நோய்

இறைவன் முதலில் உலகைப் படைத்தான்,

பின்பு தன்னை வணங்க மனிதனைப் படைத்தான். அவனுக்கு உதவியாக இருக்க

பறவைகள், மரங்கள், விலங்குகள் எனப்

பல இயற்கை வளங்களைப் படைத்தான்.


ஆரம்பம் அழகாய் இருந்தது..

மனிதன் நாடு, மதம், சாதி எனப்

பிரியாமல் அமைதியாக வாழ்ந்தான்.

மற்ற உயிரிடத்தில் அன்பாய்ப் பழகினான், மலையெங்கும் மரங்களை வளர்த்தான், மாலையில் மலர்களைக் கண்டு மகிழ்ந்தான், மனிதனுடன் சேர்ந்து இயற்கையும் நெகிழ்ந்தது பின்விளைவுகளை அறியாமல்…….


காலம் மாறியது…….காலம் மாறியது……

திடீரென ஒருநாள்.. எதிர்பாராத வண்ணம்..

ஒரு கொடிய நோய் மனிதனின் மனதை

தாக்கியது.

அந்த நாளில் இருந்து

மரங்கள் வெட்டப்படுகின்றன……

விலங்குகள் கொல்லப்படுகின்றன……

போரின் பெயரால்

தன் சொந்த இனம் அழிக்கப்படுகின்றன…….

இயற்கை நாசமாக்கப் படுகிறது……”

பேராசைஎனும் அந்தக் கொடிய நோயால்..

Tagged in : people, god, world, GREED,

   

Similar Articles.