Loading...

Articles.

Enjoy your read!

Pathuma Villain

என்னதான் நமக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், ஒரு 10-pointer நமக்கு நண்பனாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருக்கும்.  ஆனால், அதன் பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.  அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. அவர்களுடன் சேர்வதால் நாமும் அந்த துன்பங்களுக்கு ஆளாவோம். 

 

ஆகவே, சிறிது ஆராய்ச்சிக்குப் பின், அவற்றை கண்டறிந்து இங்கு தொகுத்துள்ளேன் : 

 

1. நாம் உயரமாக இருந்தாலும் சரி, குள்ளமாக இருந்தாலும் சரி, 10-pointer உடன் சேர்ந்தால் நாமும் first-bench தான், வேறு வழி இல்லை. நாம் வேண்டாம் என்று கடைசி bench சென்றாலும் நாம் இழுத்துவரப்படுவோம்.

 

 

2. நமக்கெலாம் semester exams-க்கு முன் "படிச்சிட்டயா?" என்று கேட்டாலே கோவம் வரும். இவர்கள் ஒவ்வொரு assessment-க்கு முன் கூட "படிச்சிட்டயா?", "படிச்சிட்டயா?" என்றே கேட்டு நம்மைக் கலவரப் படுத்துவார்கள்.

 


  
3. 4th semester வந்த பின்பும், அவ்வப்பொழுது, "உன் 12th cut-off என்ன?  1st sem GPA என்ன? போன sem lab என்ன grade?"  போன்ற கேள்விகளால் நம்மை காயப்படுத்தி அழ வைப்பார்கள்.

 

 

4. நாம் பேராசிரியரை பார்க்க போகும் பொழுது இவர்களை உடன் அழைத்து சென்றால், நமக்கு அர்ச்சனை நிச்சயம். காரணம், நாம் jeans மற்றும் t-shirt போட்டிருப்போம். அவர்களோ, formals உடன் shoes எல்லாம் போட்டிருப்பார்கள். "படிக்கும் பைய்யன் னா இப்படி இருக்கணும். நீயும் இருக்கியே! " என்று விழும்.

 

 

5. இவர்களுடனே சேர்ந்து சுற்றுவதால், நாம் download செய்து வைத்திருக்கும் Bunk Manager பயன் படாமல் சும்மாவே இருக்கும். எப்பொழுதாவது வகுப்பை cut அடிக்க விட்டா தானே ! ஏதாவது ஒரு வகுப்பை cut அடிக்கலாம் என்று எழுந்தாலே, "இந்த class ரொம்ப முக்கியமாம். போன class லே சொன்னாங்க. அடுத்த class cut அடிச்சுக்கோ," என்று சொல்வார்கள். அடுத்த class இலும் இதே புராணம் தான்.

( விளைவு: நான் அந்த Bunk Manager ஐ டெலீட் செய்து விட்டேன்.)

 

 

6. Semester இல் ஒவ்வொரு exam முடிந்த போதும், நமக்கு எல்லாம் தெரிந்தது போல் நம்மிடம் பதில்களைக் கேட்பார்கள். அவர்கள் சொல்லும் பதிலில் ஒன்றைக் கூட நாம் எழுதி இருக்க மாட்டோம். Exam முடிந்த உடனே result தெரிந்து விடும், நமக்கு.

 

 

7. Symposiums என்று ஒன்று வந்தால் போதும், நம்மை கல்லூரி-கல்லூரியாக இழுத்துக்கொண்டு சுற்றுவதே வேலை, இவர்களுக்கு. Ticket  எடுக்கப் பணமில்லை என்றாலும் நம்மை விடுவதில்லை.

 

 

8.  இரவு முழுவதும் நம்மிடம் WhatsApp இல் பேசும் போது ஒன்னும் சொல்லாமல், மறு நாள் வகுப்பு வந்தவுடன், "Assignment  முடிக்கணுமே! தெரியாதா ?" என்பார்கள். அப்பொழுது நமக்கு வருமே, ஒரு கோவம்........

 


இவ்வாறெல்லாம் நம்மைக் கலங்க வைத்தாலும், அவர்கள் செய்யும் சில போது சேவைகளும் உள்ளன:

 

1. ஒரு நாளும் வகுப்பில் notes எடுத்திருக்க மாட்டோம். எந்த தைரியத்தில் எடுக்கவில்லை என்றால், அவர்கள் notes ஐ Xerox எடுத்துக்கொள்ளலாம் என்ற ஒரே நம்பிக்கையில் தான்.

 

 

 

2. நம் ஆசிரியர் semester முழுவதும் நடத்திப் புரியாதவை, இவர்கள் semester க்கு ஒரு வாரம் முன் சொல்லிக் கொடுக்கும் போது புரியும். அப்பொழுது தான் மனதுக்குள் தோன்றும், "டேய் ராசா ! எங்க டா இருந்த இவ்ளோ நாளா ?" என்று.

 

3. Team Project என்று ஒன்று வந்தால், இவர்கள் team இல் நம் பெயரை இணைத்தால் போதும்.  Project work முடிந்ததாக கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

 

 

 

 

எதுவாக இருந்தாலும், இவர்களைப் பார்க்கும் போது நமக்குள் தோன்றுவது​ ஒன்றே ஒன்று

Tagged in : Sports, Teja Katragadda, News and views, Gayathri Govindarajan, Tejal Satish, Tamil, Sai Mageshvar,

   

Similar Articles.