Loading...

Articles.

Enjoy your read!

நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைய நவீன உலகத்தில் நாம் வாழ்வில் எப்பொழுதும் அவசர போக்கைத்தான் காண முடிகின்றது. இதனால் இக்காலத்தில் பலரும் அதிக விலை கொடுத்து ஊட்டச்சத்து இல்லாத உணவை சாப்பிடுகின்றோம். நாம் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததால்தான் பல நோய்கள் பெருகிவருகின்றன.

"நோயற்ற வாழ்வே குறைற்ற செல்வம்" என்பது பழமொழி. நாம் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வதே நல்வாழ்விற்கு முக்கியம். மனித வாழ்கைக்குச் சிறப்பாக வேண்டப்படுவது உணவு, உடை, உறையுள். உயிர் வாழ்கின்ற உடலை வளர்க்க பல நற்பழக்கங்களும் உடற்பயிற்சியும் மிகத் தேவை.

நல்ல வாழ்வைப் பெற நல்ல ஆரோக்கியம் தேவை. நல்ல ஆரோக்யத்தைப் பெறுவதற்கு நல்லபழக்கங்கள் தேவை. அவை, வைகறைத் துயிலெழுதல் வேண்டும். தூயநீரில் குளித்தல் வேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் நலத்தை மேம்படுத்த நடத்தல், ஓடுதல், ஆடுதல் போன்றவற்றை தினமும் செய்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்று உறக்கம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப 8 மணிநேரத்திற்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு 22% அதிகமாக இதய நோய் ஏற்படுகிறது. மேலும் நல்வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு மட்டும் போதாது, சுகாதாரமும் தேவை.

நல்ல வாழ்விற்கு நல்ல மனத்தூய்மை வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்ற நான்கையும் நீக்க வேண்டும். நல்லனவே என்னி நல்லவற்றைச் செய்ய வேண்டும். பணமிருந்தாலும், வாழ்வில் வசதி இருந்தாலும் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் அனைத்தும் பயன்படும். ஆகவே நாம் அனைவரும் மனத்தூய்மையும், உடல் தூய்மையும் பெற்று சிறந்த உலகில் வாழும் முறை அறிந்து வாழவேண்டும்.

Tagged in : ARTICLE, AROKKIYAM, NALVAAZHVU,

   

Similar Articles.