"நதியே நதியே..!!"
வெண்மையாய் கரைபுரண்டு ஓடும் நதியின் அழகைப் பெண்மையின் அழகில் காதலைக் கொண்டு உவமித்து கூறும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் வந்த நீர்த் துளிகள். நதியாக சில வரிகளில் செல்வோம்.
"நதியே நதியே
காதல் நதியே நீயும்
பெண்தானே அடி நீயும்
பெண்தானே...."
பாயும் நதியின் அழகே பெண்ணின் அழகு என்று அழகை இணைத்துப் பேரழகு சேர்ந்த வரிகள்.
"ஒன்றா இரண்டா
காரணம் நூறு கேட்டால்
சொல்வேனே நீ கேட்டால்
சொல்வேனே..."
ஏன் என்று சொல்வேன் பல காரணங்கள் நீ பெண் என்பதற்கு நூறாகவும் இருக்கும் என்று சொல்வேனடி நதியே, நீ கேட்டால் மட்டும்..
"நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி நின்றால்
கடல் அல்லோச் சமைந்தால்
குமரி மணந்தால் மனைவி
பெற்றால் தாய் அல்லோ..."
அவளின் நடை நதிகளின் வழியே உலா வரும் ஆறாக, பின் எழுந்தால் பரந்த விரிந்த அழகு அருவியாகவும், மேலும் நின்றால் எல்லையற்ற நீல நிறத்தை தன்னுள் கொண்ட கடலாகவும், அக்குமரி பெண் தன்னை மணந்தால் மனைவியாவாள் அவளே குழந்தை பெற்றால் தாயாவாள், அவள் என்று நதியைச் சொல்வது எத்துனை அழகு!
"சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே..
தினம் மோதும்
கரை தோறும் அட ஆறும்
இசை பாடும்..."
தினமும் கரைகளைத் தொட்டு கரைந்து செல்லும் நீர்த் துளிகளில் எனக்கு அவள் முகமே புலப்படுகிறது. இதில் ஒரு வண்ணமாய் நதி கரைதொடும் நேரம் இசையாய் ஒலிக்கிறது.
"கங்கை வரும்
யமுனை வரும் வைகை
வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே..."
உலகில் பல நதிகள் யாவும் பாயும் அதன் ஓசையின் அழகு அவள் நடையே! காதல் நதியின் நடை!
"காதலி அருமைப்
பிரிவில் மனைவியின்
அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய்
கோடையிலே..."
சென்ற காதலி, மறைந்து சென்ற மனைவி இப்பிரிவு எல்லாம் நம்மை விட்டு ஒரு மனம் பிரிந்தால் மட்டுமே அருமை புரியும் அதுபோல
நீரின் அருமை கோடைக்கால வெயிலில் புலப்படும் என்று பிரிவினை பிரிந்தே விளக்குகிறார்.
"வெட்கம் வந்தால்
உறையும் விரல்கள்
தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று
வாடையிலே..."
வெட்கம் பெண்மையின் ஒரு குணம் அவ்வாறே வெட்கத்தில் விரல்களில் உரைந்து நிற்க சற்றே உதித்தால் நிரே உதிரும் பெண்ணும் நீரும் ஒன்றே வாடையும் ஒன்றே!!
"தண்ணீர்க் குடத்தில்
பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர்க் கரையில்
முடிக்கிறோம் ஓஹோ..."
உலகில் ஒவ்வொரு உயிரும் முதலில் கண்ணீர்த் துளியுடன் பிறக்கும்.
அதே உயிர் காலம் முடிந்ததும் ஒரு புடி மண்ணாகா நதியில் கரைக்கிறோம். பிறப்பும் இறப்பும் நீரிலே!
"வண்ண வண்ண
பெண்ணே வட்டமிடும்
நதியே வளைவுகள் அழகு..."
நதியின் வருகையில் பள்ளங்கள் மறைத்து வளைந்து அழகாய் வரும் இவையெல்லாம் பெண்மையின் குணமே !
"நீர் நினைத்தால் பெண்
நினைத்தால் கரைகள் யாவும்
கரைந்து போக கூடும்..."
பெண் என்பவள் வாழ்க்கை என்னும் கடலில் பல வடிவம் எடுக்கிறாள். அதைப்போல் ஆறும் தன்கேற்றபோல் பல வடிவம் பெறுகிறது.
நீரும் சரி பெண்ணும் சரி, தான் நினைத்தால் எல்லையற்றக் கரைகளைக் கடந்து கரைந்து போகக்கூடும்..
20 வருடங்களாக இன்றும் என்றும் இந்த வரிகளில் அவள் நதியே!!!