Loading...

Articles.

Enjoy your read!

நனிசைவம் (Veganism)

நனிசைவம் என்பது விலங்குப்பொருட்களைப் பயன்படுத்துவதையும் அவற்றை உணவாக உட்கொள்வதையும் தவிர்க்கும் ஒரு சமூகமாகும். இச்சமூகம் விலங்குகளை வணிக பொருட்களாக கருதுவதையும் மறுக்கிறது. இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர்(vegan) என அழைக்கப்படுகின்றனர்.

1944-இல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டொனால்ட் வாட்சன் என்பவர் வீகன்(Vegan) என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். 1951-இல் வீகன் சமூகம் 'விலங்குகளை தன்னலப்படுத்தாது மனிதன் வாழவேண்டும்' என்ற சித்தாந்தத்தை வழியுறுத்தியது.

2010 முதல் நனிசைவத்தின் ஆர்வம் மேலோங்கியது. பல நனிசைவ கடைகள் திறக்கப்பட்டன. பல நாடுகளில் பல்பொருளங்காடிகளிலும் உணவகங்களிலும் நனிசைவ விருப்பத்தேர்வுகள் கிடைக்கலாயின.

 

நனிசைவம் பல வகைகளாக காணப்படுகின்றன. அவை,

•     உணவுமுறை நனிசைவர்கள்:

                  இவர்கள் விலங்கு இறைச்சியை மட்டுமன்றி முட்டையுணவுகள், பால்பொருட்கள் மற்றும் பிறவிலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களையும் தவிர்க்கின்றனர். சிலர் தேனும் உண்பதில்லை.

 

•     நன்னடத்தை நனிசைவர்கள்:

             இவர்கள் விலங்குப்பொருட்களை உடையாக மற்றும் அணிகலனாக அணிவதையும் தவிர்பவர்கள். தோல்சரக்கு நுட்பியல், கம்பளி, இறகுகள், எலும்புகள் மற்றும் முத்து இவற்றை கொண்ட பொருட்களையும் பாவிப்பதில்லை.

 

•     சுற்றுச்சூழல் நனிசைவர்கள்:

         இவர்கள் தொழில்முறை விலங்குப்பண்ணைகள் சுற்றுச்சூழலின் பேண்தகுநிலையை (sustainability) பாதிக்கிறது என்ற காரணத்தால் விலங்குப்பொருட்களை தவிர்பவர்கள்.

நனிசைவர்கள், பழங்கள், காய்கறிகள், அவரைகள், தானியங்கள், கொட்டைகள் ஆகியவற்றையும் இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நனிசைவ இனிப்புகள், நனிசைவப் பாலாடைக்கட்டி , நனிசைவ அணிச்சல்களை(cakes)  உணவாகக் கொள்கின்றனர். நன்கு திட்டமிடப்பட்ட நனிசைவ உணவு முறைகள் இதய நோய்கள் உள்ளிட்ட சில வகையான நாட்பட்ட(chronic) நோய்களுக்குத் தீர்வாகிறது. நனிசைவ உணவு முறையில் நார்ச்சத்து, மக்னீசியம், உயிர்ச்சத்து-இ, உயிர்ச்சத்து-சி, இரும்பு போன்ற வேதிகள் கூடதலாக உள்ளன.

அசைவ உணவிலிருந்து பெறப்படும் நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால், நீள்–சங்கிலி ஒமேகா–3, கொழுப்பமிலங்கள், உயிர்ச்சத்து–டி, கால்சியம், துத்தனாதம், உயிர்ச்சத்து–பி12 ஆகியன நனிசைவ உணவுகளில் மிகக்குறைவாகவே உள்ளன, சமநிலையற்ற நனிசைவ உணவு முறை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

 

"நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி" (குறல் 324)

    எனும் குறள்வழி, 'எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியே நல்வழி ஆகும்' என்கிறது.

'மனித சமூகம் தன்னால் இயன்றவரை வலியுணரும் உயிரினத்திடமிருந்து வரும் எந்த பொருட்களையும் உண்ணாமலும் உடுத்தாமலும் அவற்றின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றை நம் தேவைகளுக்குப் பயன்படுத்தாமலும் வாழ்வது', நனிசைவர்களின் நெறியாகும்.

 

Tagged in : ARTICLE, Tamil, veganism,

   

Similar Articles.