மங்கையராய் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா !
என்று சங்ககால கவிஞர்கள் புகழ்ந்து பாடியது பெண் ஆதிக்கத்திற்காக அல்ல பெண் உரிமைக்காக. "பெண்ணியம்" என்பது பெண்களுக்கான சம உரிமைகளைப் பெற்றுத் தரும் கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்ட சொல்லாகும்.
FEMINISM என்னும் ஆங்கிலச் சொல் , FEMINA என்னும் இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்பதாகும்.
பெண்ணியத்தின் தொடக்கத்தைத் தேடிச் சென்றால், அது நம்மை பதினெட்டாம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்லும்.
1885 ஆம் ஆண்டு காசிம் அமீன் என்பவர் புதுமைப்பெண் என்ற நூலை எழுதி பெண்ணியத்திற்காக குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து, பலரும் பெண்ணியத்திற்குக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
1960 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்தியாவில் பெண்ணியம் என்ற சொல் அதிகமாகப் பேசப்பட்டது.
பெண்ணியத்தின் முன்னேற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாக வேண்டும். பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக ஒவ்வொரு பெண்ணும் மாற வேண்டுமென்றால் அவர்களின் உரிமைகள் அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
பாரதியும், பாரதிதாசனும், வள்ளுவனும், புத்தனும், சித்தனும் போற்றிய பெண்மையை, அனைவரும் போற்றும் நாள் வருகையில் பெண்ணியம் அதன் உண்மை தன்மையை அடைந்திருக்கும்.
அனைவரும் சமம் என்ற கோட்பாடு, சாதி, மதங்களைக் கடந்து, ஆண், பெண் என்பதற்குள் உருவாக வேண்டும்...
ஆணும் பெண்ணும் சமம் என்பது
அனைவருக்குள்ளும்
ஆழமாக வேரூன்றி நின்றுவிட்டால்
சாதி மதங்கள் எல்லாம்
சரிந்து விடும் !