Loading...

Articles.

Enjoy your read!

நம்மை இயக்கும் இசங்கள்- இனவெறி (Racism)

உலகில் உள்ள 700 கோடி மக்கள் தங்களுக்குள் பல்வேறு குழுக்களாகவும், பிரிவுகளாகவும் உள்ளனர். நாடு, மொழி, இனம், மதம், சாதி போன்ற காரணங்களால் பிரிந்துள்ளனர். மனிதர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். பொதுவாக இனம் என்பது மனிதனின் உடல் பண்புகளை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களில் இனம் என்பது மனிதனுடைய தோலின் நிறம், முடித்தோற்றம், முகத்தோற்றம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

இவ்வாறு இனங்களாகப் பிரிந்து வாழும் மனிதர்களிடம் இருக்கும் சமுதாயப்பண்பு இனப்பண்பினை காட்டிலும் குறைவாக உள்ளது. ஆதலாலே பிற இனங்கள் மீதான வெறுப்பு அவர்களிடையே பிறக்கின்றது. இனவெறி என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் தொடர் கதையாக உள்ளது. ஒரு இனத்தைச் சேர்ந்தவரால் தன்னுடைய சுயநலத்திற்காகவும் இனநலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் செயல் மற்ற இனத்தின் மீதான வெறுப்புக்கு காரணமாகிறது. ஒரு இனத்தின் மூலம் ஏற்படும் சமுதாய மாற்றங்களும், விளைவுகளும் இவ்வெறிக்கு காரணமாகின்றன.

இனவெறி என்பது பல ஆண்டுகளாக தொடரும் தொடர்கதை. ஆப்பிரிக்க இனவெறி, அமெரிக்க இனவெறி, ஹிட்லரின் யூத இனவெறி போன்றவை இன்றளவும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தின. ஆசியாவில் நடந்த ஜீலை வெறி என்பது இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலாகும். ஆப்பிரிக்காவில் இனவெறி என்பது கறுப்பினத்தவர் மத்தியில் நிகழ்கின்றது. இதைப்போல் அமெரிக்காவில் இனவெறி என்பது கறுப்பினத்தவருக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே நிகழ்கின்றது. அமெரிக்காவில் கருப்பினத்தவராக வசித்து வந்த மார்கம் எக்ஸ் என்பவர், கருப்பினத்தவர்களுக்கு என்று தனி நாடு வேண்டும் என்று முழங்கினார். ஆனால் அக்கருத்தை ஏற்காத மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களால் 1965ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இதே போன்று ஜார்ஜ் ப்ளாய்ட் என்பவர் கருப்பினத்தை சேர்ந்தவர் என்று வெள்ளையின காவல் அதிகாரி சுட்டு வீழ்த்தினார். தாம் வகிக்கும் பொறுப்பில் கூட இனம் என்றால்? இனம் தான் முதல் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இத்தகைய இனவெறியை ஒழிக்க பலமுனை போராட்டம் அவசியம். அதற்கு மற்ற இன மக்களை புரிந்துக்கொள்ளவும், உள்ள படியே மனிதர்களை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராக வேண்டும். இனவெறி அற்ற சமுதாயம் வளர பாடுபடுவோம்.  

Tagged in : series, power, deology, Racism,

   

Similar Articles.