Loading...

Articles.

Enjoy your read!

மரத்துப் போன மனிதம்

இதனால் அதனால் எதனால்

காரணம் ஆயிரம் சொல்லி,

இவனால் அவனால் உன்னால்

என்று பழியை எளிதாய் திணித்தேனே;

நாளை நாளை என்று

எத்தனை நாட்களைக் கழித்து,

தேதி மாதம் மறந்து

இலக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து திரிந்தேனே;

நினைத்தது நினைவாக மட்டுமே 

செயலாக உருப்பெறவில்லையே,

உணர்வுகளற்ற மனமே 

நிற்க கதியற்று உடைந்து நின்றதே;

புத்துணர்ச்சி இல்லா காலை

பகலோ பொருளில்லாப் பாலை;

மனம் போன போக்கில் மாலை 

அலைபாயும் எண்ணங்களோடு அரற்றும்  இரவும்;

உறவுகளும் உணர்வுகளை இழந்து,

உரையாடல்களும் ஊடகங்களோடு முடங்கி;

புத்தாண்டு வந்தால் புத்துயிர் வரும்

என்ற நம்பிக்கையும் உடைந்து,

என் இதயமும் கண் கலங்கியதே;

முகத்தில் போலியான புன்னகை

நிஜத்தில் அர்த்தமில்லா நாளை

மொத்தத்தில் நிச்சயமில்லா வாழ்க்கை

கொரோனா அழித்தது உயிர்களை மட்டுமா?

நம் உணர்வுகளையும் தான்!

Tagged in : covid, quarantine, ONLINE MODE,

   

Similar Articles.