Loading...

Articles.

Enjoy your read!

கமலஹாசன் பிறந்தநாளிற்கு ஒரு ரசிகனின் கவிதை

துயில் முயலும் வேளையிலே துளிர் விடும் ஓர் நினைவு 

இவன் என் கவியாக எழுதுகிறேன் பலித்ததிங்கு பல நாள் கனவு 

பச்சை தமிழ் வாசம் வீச பரமக்குடியில் பிறந்த பாரதியின் மீச

பார் எங்கும் இவன் புகழ் இன்று சார தீ போல பார்த்தசாரதியாய் அன்று பிறப்பெடுத்தான் 

கமலம் போல கண்கள் கம்பீரம் பேச கமல் ஹாசனாய் உருவெடுத்தான் 

ஒருமையில் பேச சற்று சலனம் தான் ஓர் உரிமையில் பேசுகிறேன் நாத்தீக கடவுளே 

களத்தூர் கண்ணமாவில் வெள்ளை கரும்பாய் அபூர்வ ராகங்களில் நடிப்பின் உருவாய் 

எந்த தலைமுறையும் தன் திறமையால் கவரும் 'குணா'திசயம் கொண்டவன் 

உன் குரல் கேட்கும் போதெல்லாம் அணு பிளவு நினைவு கூர்வேன் 

பிறப்பிற்கு அணு மூலம் படைப்பிற்கு நீ மூலம் 

இதயங்களை கவர்வதில் நீ வசூல் ராஜா 

மன நிலையை சோதிக்கும் சிகப்பு ரோஜா

அவ்வை சண்முகியாய் பெண்மை பேசி 

மகளிர் மட்டுமில் பெண்மை போற்றி 

விருமாண்டியாய் வீரம் கொண்டவன் 

பஞ்சதந்திரம் சிரிப்பிற்கு 

சலங்கை ஒலி நடனத்திற்கு 

சத்யா துடிப்பிற்கு 

நினைத்தாலே இனிக்கும் நினைவிற்கு 

நாயகனோ நடிப்பிற்கு 

தசாவதாரம் படைப்பிற்கு 

விஸ்வரூபம் கொண்டு வருங்காலம் உணர்த்த 

அன்பே சிவமாய் என் மனதை நிறப்ப 

உன்னை வெகு சில வார்த்தைகளில் அடக்க நினைப்பது அபத்தம் அல்லவா 

உன் தரிசனம் வேண்டும் ஆழ்வார்பேட்டை ஆண்டவா 

புரிந்தோர்க்கு நீ உத்தம வில்லன் 

என்றும் நீயே நடிப்பின் மன்னன் 

நீ குட்டையானால் அப்பு வந்தான் 

நீ மொட்டையானால் ஆளவந்தான் 

மகாநதியாய் அறிவு உலகில் ஓடுபவன் 

படித்து, பார்த்து, படைத்து, கவி இயற்றி, நடித்து, பாடி ஆடுபவன்

அன்புள்ள மூன்றாம் பிறையே பத்மஸ்ரீயே

கலை உலகில் நீ காண வேண்டும் ஆயிரம் பிறையே

நீ தமிழ் நாட்டின் பொக்கிஷம் 

இந்தியாவின் கெளரவம்

சாதிகளை ஒழிக்க ஒரு தேவர் மகன் 

நீயே கலைத்தாயின் முதல் மகன்

கல்யாணராமனில் நீ பல்லவன்

கலை உலகில் சகலகலா வல்லவன்

இதோ இன்று உலக நாயகன்

நீ இருக்கு என்போரின் சத்ரு 

இல்லை என்போரின் சத்குரு 

                                                     இப்படிக்கு 

                                              உன் பரம ரசிகன்

                                                 பா.கிரண்சாய்

                                                முதலாம் ஆண்டு 

                                        ஜியோ-இன்பர்மாடிக்ஸ்

                                                 (Geo informatics)  

                                 கிண்டி பொறியியல் கல்லூரி

Tagged in : கமல், பா.கிரண்சாய்,

   

Similar Articles.