உண்ண உணவளித்தாய்
உறங்க நிழலளித்தாய்
பசியாற்ற பழங்கள் தந்தாய்
பிணி போக்க மருந்தளித்தாய்
அன்போடு அரவணக்க தென்றலாகி வந்தாய்
அவ்வப்போது கோபித்தால் உன் சீற்றத்தால்தான் கொந்தளிப்பாய்
மக்கள் உன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் அதனை
மன்னித்து சமநிலையைக் காக்கவே பாடுபடுவாய்
அனைத்தையும் செய்தாய்
ஓர் அன்னையைப் போல
ஆம் நீயும் எங்களுக்குத் தாய் தான்
உன்னைக் காப்பதும் எம் கடமையே !!!