It was a day darker than night
Even those with hearts of stone, cowered in fright
Rain was no longer made of pure delight
The consequences of our actions, have been brought to light
பல வருடங்களுக்கு முன் வந்தன ஆழிப்பேரலை
இன்றோ கண்டேன் உயிரை வாங்கிய மழை
செய்த தவறுகளுக்கு மனிதன் செலுத்திய விலை
இனியாவது காண்போமா நம் வாழ்வின் பிழையை?
பகலில் சூரியன் இரவில் மின்சாரம் என்று
வெளிச்சத்தில் வாழ்ந்த ஆதாரம் தொலைத்து
மூழ்கிவிட்டோம் இருளிலும் நீரிலும் நாம்
இயற்கை புகட்டிய வாழ்வியல் பாடத்தைக் காண்.
ஆறு கரையை தொட்டுவிட்டுப் பின் தன் வழி தேடும்
எல்லையைத் தீண்டித் தாண்டாத வரை சமூகம், சுமூகம் ஆகும்.
இயற்கை கற்றுக்கொடுத்த பாடம் அது
எல்லை மீறி வாழ்ந்த வாழ்க்கைக்குப் பாரம் இது.
மழை தங்கும் ஏரிகளை area-வாகப் பார்த்து
நீர் தாங்கும் அணைகளை மனைபோட்டு விற்று
ஓடும் ஆறுகளின் தமனிகளைக் குப்பையால் அடைத்து
வெள்ளமாய் ஓடியது வேறென்ன – இயற்கையின் கண்ணீர் சொட்டு.
When the day is darker than the night
When the roads become rivers of might
Then yesterday’s heaven has become today’s hell
We, as a species, are miserably responsible.