எதுவும் அழியலாம் மண்ணும் ஏன் விண்ணும்
இது அழியாது இறைவனின் வார்த்தை.
எதுவும் வற்றிப்போகலாம் தண்ணீரும் ஏன் கண்ணீரும்
இது வற்றாத இறைவனின் வார்த்தை.
எதுவும் நின்று போகலாம் மூச்சும் ஏன் உயிரும்
இது உயிருள்ள இறைவனின் வார்த்தை.
எதுவும் செத்துப் போகலாம் ஏன் நீயும் நானும்
இது சாகாது இறைவனின் வார்த்தை.
எதுவும் தகர்க்கப் படலாம் ஏன் வான்உயர்ந்த கோபுரங்களும்
இது தகர்க்க முடியாத இறைவனின் வார்த்தை.
இது இறைவனின் வார்த்தை.
விதையாகும் ஒரு போதும் வீணாகாது
இறைவா,
உம் வார்த்தை தான் உம் வலிமையா?
இல்லை,
உம் வலிமை தான் உம் வார்த்தையா?