வெயிலின் தாக்கத்தை
விளக்கும் விருட்சம் போல;
என் வெறுமையின் தாக்கத்தை
விளக்குவது உம்மீது யாம் கொண்ட விருப்பம்!
உன்மீது இருப்பது காதலா என நான் அறியேன்!
அது காதல் தான் என்று சொல்லும் என் மனதிற்கும் ;
அது காதல் இல்லை, என்று சொல்லும் என் மதியிற்கும்,
நடக்கும் மோதல் என்பதை நான் அறிவேன்!
எதற்குமே விழாத என் மனம் விழுந்தது ;
இசை என்னும் உன்னால் வசப்பட்டதால்! ஆதலால் என் இதயத் துடிப்பும் ,
உன் வசத்தில் எப்போதும்!