Loading...

Articles.

Enjoy your read!

ஹலோ!  நான் தான், மொபைல் பேசுறேன்!

ஹலோ!  நான் தான் உங்க மொபைல் போன் பேசுறேன். 
நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? 
எல்லாரும் நலம் தானே? 
என்னோட நிலைமைத் தாங்க
ரொம்ப மோசமா இருக்கு. சாதாரண நாளிலேயே நீங்க எல்லாரும் என்ன
அதிகமா பயன்படுத்துவீங்க, இப்போ ஊரடங்கு வேற, இப்போ கேட்கவா
வேண்டும். 24 மணி நேரமும் உங்க கையில் நான் தானே இருக்கேன்.
ஊரடங்கு உத்தரவு வருவதற்கும் முன்னாடி ஒரு நாளைக்கு எனக்குக்
கொஞ்சமாவது ஓய்வு கிடைக்கும்.  இப்போ, ' ஓய்வு' அப்படி என்றால்
என்னவென்றே மறந்து போச்சு எனக்கு.
காலையில் எழுந்தவுடன் என்னச் செய்ய வேண்டும்? பல் தேய்க்க
வேண்டும். ஆனா நீங்க எல்லாரும் பல் தேய்க்கிரீங்களோ இல்லையோ
முதலில் என்னை எடுத்து யார் என்ன மெசேஜ் அனுப்பி இருக்காங்க என்று
பார்த்து விட்டு அவங்களுக்குப்  பதில் அனுப்பிய பிறகே மற்ற
வேலைகளைத் தொடங்குவீர்கள். கையில் எடுத்த அப்பறம் என்னைக் கீழ
வெக்கவே மாட்டீங்க .... சாப்பிடும் பொழுதுகூட என்னைப் பயன் படுத்திக் கொண்டே
சாப்பிடுவீர்கள். அதைப் போட்டோ எடுத்து " Today's breakfast/ brunch/ lunch/ dinner" என்று
ஸ்டோரி, ஸ்டேடஸ். போடுவிங்க. அப்புறம் நாள் முழுக்க ' WhatsApp, Instagram,
Facebook, Twitter, Snapchat', (பெரிய லிஸ்ட்! நான் கொஞ்சம் தான் சொல்லி
இருக்கேன்) இவங்களோடு தான் பொழுதப் போக்குவீங்க ..... இவங்களைப்
பயன் படுத்தவில்லை என்றாலும் பாட்டுக் கேட்பது , விடிய விடிய
போன் பேசுவது .... இதைச் செய்வீர்கள். உங்களுக்குப் பேசிப் பேசி வாய்
வலிக்குமா என்று எனக்குத் தெரியாது, எனக்கு நீங்க பேசுரதைக் கேட்டுக்
கேட்டுக் காது வலிக்கிறது.
உங்களுக்குக் கோபம் வந்தாலும் அதை என் மேல் தான் காட்டுவீங்க, 
சந்தோஷமாக இருந்தாலும் அதை என் மேல் தான் காட்டுவீங்க !
கோபத்தில் நீங்கள் என்னைத் தூக்கி எறியும் போது எனக்கு எவ்வளவு
வலிக்கும் தெரியுமா? நிறைய முறை என்னோட  மூஞ்சி உடைந்துப் 
போகும். ஆனால், நீங்கள் கொஞ்சம் நேரம் அதைப் பற்றி வருத்தப்பட்டப் பிறகு
என்னை வழக்கம் போல் பயன் படுத்தத்  துவங்குவீர்கள். சில நாட்கள்
கழித்துத் தான் என்னைச் சரி செய்வீர்கள். மெசேஜ் அனுப்பும் போது
நீங்கள் வேக வேகமாக டைப் பண்ணும் போது நீங்க கொடுக்குற  அழுத்தம்
எனக்கு வலிக்கும் தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் உடல் வலி
இருக்குமா?  எனக்கும் இருக்கும்!
சார்ஜ் பன்னும் போதாவது என்னைச் சும்மா இருக்க விடுரீங்களா?
இல்லையே ... அப்போது கூட என்னைப் பயன் படுத்துவீர்கள். சில பேர் சார்ஜ் போட்டக் கொஞ்ச நேரத்திலேயே எனக்குச் சார்ஜ் இருக்கா இல்லையா
என்று பார்க்காமலேயே எடுத்துப் பயன் படுத்துவீர்கள். நீங்க சாப்பாடு
சாப்பிட்டு உங்க உடம்புக்குச் சார்ஜ் ஏத்திக் கொள்கிறீர்கள்.  ஏன் என்னை
மட்டும் சார்ஜ் பண்ணிக்க விட மறுக்கின்றீர்? காலை , மதியம்,  மாலை
என்று இவ்வளவு நேரம் என்னைப் பயன் படுத்தி விட்டு எனக்கு இரவு
நேரத்திலாவது ஓய்வு கொடுக்கலாம் அல்லவா? அப்பொழுதும் என்னை
வைத்துக் கொண்டு தூங்காமல் இரவு நேரத்தைக் கழிப்பீர்கள். செத்துப் போவது
என்னுடைய தூக்கம் மட்டும் இல்லை உங்களுடையதும் தான். கடைசியா
உங்களுக்குத் தூக்கம் வந்து நீங்க‌ தூங்கபோகும் போது கூட என்னப்
பக்கத்திலேயே வச்சுப்பீங்க ஏன்? என் மேல அவ்வளவு பாசமா உங்களுக்கு?
இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு நல்லா ஓய்வு எடுத்துக் கொள்ள ஒரு
நல்ல வாய்ப்புக் கிடைச்சு இருக்கு. அப்படியே எனக்கும் கொஞ்சம் ஓய்வுத்
தந்தீங்க என்றால் உங்களுக்குப் புண்ணியமாப் போகும். ரெண்டு பேரும்
சேர்ந்து ஓய்வு எடுக்கலாம். இது எப்படி? உங்களுக்கு என்ன வச்சுத் தான்
பொழுது போகுது என்று எனக்குத் தெரிகிறது. எனக்கும் நீங்க இல்லாமல்
பொழுது போகாது. ஆனால், உங்கள மாதிரி நானும் பாவம் தாங்க. என்
நிலைமைப் பற்றியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!


இப்படிக்கு உங்கள் செல்ல மொபைல் போன்.

Tagged in : MySpace, quarantine, A letter, Smartphone, Effects,

   

Similar Articles.